Friday, June 2, 2023
Home > செய்திகள் > பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் உட்பட ஆறு பேர் டெல்லியில் கைது

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் உட்பட ஆறு பேர் டெல்லியில் கைது

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் உட்பட ஆறு பேர் டெல்லியில் கைது. குறிப்பிட்ட மதத்தை தாக்கி முழக்கங்கள் எழுப்பியதாக குற்றசாட்டு. ஆகஸ்ட் 8 ஞாயிறன்று டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்தது. அதில் இரு வேறு பிரிவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பிஜேபிக்கு எதிராகவும் பிரதமருக்கு எதிராகவும் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் பேசியதாக தெரிகிறது.

அந்த போராட்டத்துக்கு எதிரான போராட்டமாக பிஜேபி முன்னாள் செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபத்யாய் தலைமையிலும் ஒரு போராட்டம் நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட ஒரு மதத்தினரை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பியதாக குற்றசாட்டு எழுந்தது. அதையடுத்து AAP எம்எல்ஏ கொடுத்த புகாரின் அடிப்படையில் உடனே வழக்கு பதியப்பட்டது.

`

பெண் வழக்கறிஞர்கள் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் அஸ்வினி உபத்யாய், வினோத் ஷர்மா தீபக் சிங், வினித் கிரந்தி, தீபக், பிரிட் சிங் உட்பட ஏழுபேரை காவல் நிலையம் வரவைத்தது காவல்துறை. இன்று பிற்பகல் அவர்கள் ஆறு பேரையும் கைது செய்து சிறையிலடைத்தது காவல்துறை.

“இந்திய பிரதமரை ஆபாசமாக பேசியவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காத காவல் துறை நடக்காத ஒரு சம்பவத்திற்கு இவ்வளவு முனைப்பு காட்டுவது ஏன்..? என டில்லி பிஜேபியினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மேலும் “வெஸ்ட் பெங்காலில் வன்முறை தலைவிரித்தாடும்போது ஊடகங்கள் அதை ஒரு செய்தியாக கூட போட எத்தனிக்கவில்லை. ஆனால் கூட்டத்தில் எழுந்த குரலுக்கு இவ்வளவு ஊடக வெளிச்சம் ஏன் என டில்லி பிஜேபி தலைவர் ஒருவர் கேள்விகளை அடுக்கினார். மேலும் “கூட்டத்தில் பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அவர்களில் யார் முழக்கமிட்டது பிஜேபியினரா இல்லை எதிரணியினரா என யாருக்கும் தெரியாது. ஆனால் குற்றச்சாட்டை பிஜேபி மேல் வைக்கிறார் ஆம் ஆத்மீ அமானுல்லா. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை” எனவும் குறிப்பிட்டார்.

…உங்கள் பீமா