மதசார்பற்ற நாடு என கூறிக்கொள்ளும் இதே தேசத்தில் தான் மதம் சார்ந்து செயல்படும் அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் சாதியை, ஒரு சிலர் மதத்தை என எப்போதுமே அதை வைத்தே அரசியல் செய்ய பழகிவிட்டார்கள். உண்மையான மதசார்பின்மை என்பதின் அர்த்தம் யாருக்கும் இன்னும் சரிவர புரிந்ததாக தெரியவில்லை.
ராஜஸ்தானில் அமைந்துள்ளது அஜ்மீர் ஷரிஃப் தர்ஹா. இது 1947ல் இந்திய சுதந்திரம் அடைந்த இரண்டு வருடங்களில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதே நேரு அவர்கள், மொகலாய படையெடுப்பால் சிதைந்துபோன சோம்நாத் கோவில் புனரமைக்கப்பட்டு 1951 ல் திறப்புவிழா நடந்தது. அதற்க்கு நேரு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் நேரு அதை தவிர்த்துவிட்டார். அப்போதைய ஜனாதிபதியையும் போகவேண்டாம் என தடுத்தாக செய்திகள் உலவுகிறது.
இங்கு சிறுபான்மை பெரும்பான்மை என பேதம் இல்லை. அனைவரும் இந்தியர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். சிலரின் சுய லாபத்துக்காக பேதங்கள் வலிந்து திணிக்கப்படுகிறது என்பதே கசப்பான உண்மை.
…உங்கள் பீமா