Saturday, July 27, 2024
Home > அரசியல் > அதிமுக அமைச்சர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது FIR, வேட்டையாடும் திமுக

அதிமுக அமைச்சர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது FIR, வேட்டையாடும் திமுக

திமுக ஆட்சிக்கு வரும் முன்பே அதிமுகவின் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். அதையே தன் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார். கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார் முக ஸ்டாலின். அதாவது அதிமுகவின் மேல் நடவடிக்கைகள் எடுப்பதில் மட்டும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

வாக்குறுதியை எங்கே மக்கள் கேட்டுவிடப்போகிறார்கள் என பயந்தே நேற்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டதாகவும் பிஜேபி குற்றசாட்டை முன்வைக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அலுவலகத்திலும் சோதனை நடத்தி அவர் மேல் வழக்கு பதிந்திருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.


இன்று காலை கோவை குனியமுத்தூரில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். பத்திற்க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது..

`

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த சோதனை நடைபெற்றது.

```
```

2014 முதல் 2018 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சியில் ரூ.464.02 கோடி மற்றும் அதே காலகட்டத்தில் கோவை மாநகராட்சியில் ரூ.346.81 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டு பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவங்கள் பெயரும் முதல் தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

…உங்கள் பீமா