Saturday, October 5, 2024
Home > செய்திகள் > நிராகரிக்கப்பட்டாரா..? தகுதி பெறவில்லையா..? பிரிவினையை விதைக்கும் தமிழக ஊடகங்கள்..?

நிராகரிக்கப்பட்டாரா..? தகுதி பெறவில்லையா..? பிரிவினையை விதைக்கும் தமிழக ஊடகங்கள்..?

9-3-22/10.18am

சென்னை : உக்ரைன் ரஷ்யா மோதலில் உக்ரைன் சார்பாக போரிட எந்த நாட்டவரும் வரலாம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து உக்ரைனை பல பெண்கள் மாணவர்கள் என ராணுவத்தில் சேர தொடங்கியுள்ளனர். மேலும் அந்நாட்டு வழக்கப்படி எந்த ஒரு அரசு சார்ந்த பணியில் சேரவேண்டும் என்றாலும் ராணுவத்தில் சிலகாலம் பணியாற்றியிருக்கவேண்டும் என்பது கட்டாயம்.

இந்நிலையில் தமிழ்நாடு கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார். இந்திய புலனாய்வு அமைப்பான ரா (RAW) நேற்று இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சாய்நிகேஷ் ரவிச்சந்திரன் முதலில் இந்திய ராணுவத்தில் சேர முயன்றிருக்கிறார். ஆனால் உயரம் போதாமை காரணமாக தகுதி தேர்வில் தோல்வியடைந்திருக்கிறார்.

`

அதன்பின்னர் இந்திய வெளியுறவுத்துறை மூலமாக அமெரிக்க ராணுவத்தில் சேர முயன்று அங்கும் தகுதியின்மை காரணமாக தேர்ச்சியடையவில்லை. அதையடுத்து உக்ரைனில் விண்வெளி தொடர்பான மேற்படிப்புக்கு சென்றிருக்கிறார். இந்த போர்சூழலை பயன்படுத்தி உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். ஆனால் இங்குள்ள ஊடகங்கள் இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டதாக பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

```
```

அவர் இந்திய மற்றும் அமெரிக்க ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டார் என தொடர்ந்து செய்திகள் வெளியிட்டுவருகின்றன. ஆனால் அவர் தகுதிபெறவில்லை என்பதே மிக சரியான கூற்றாகும் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

……..உங்கள் பீமா