Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > மிரட்டப்பட்டதா பாலிமர் செய்தி நிறுவனம்..? செய்தியை நீக்கியது ஏன்..?

மிரட்டப்பட்டதா பாலிமர் செய்தி நிறுவனம்..? செய்தியை நீக்கியது ஏன்..?

21-01-22/13.45pm

சென்னை : அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி கட்டாய மதமாற்றத்தை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் பிஜேபியை தவிர எந்த ஒரு அரசியல் கட்சியும் கண்டனக்குரல் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த பெண்ணின் தந்தை முருகானந்தம் மற்றும் அவரது மனைவி நீதி கேட்டு போராடியதற்காக நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும் இதுவரை குற்றம்சாட்டப்பட்ட பள்ளிநிர்வாகத்தின் மீதோ பணியாளர்கள் ஆசிரியர்கள் மீதோ எந்த ஒரு எப்.ஐ.ஆரும் பதியப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சந்தேக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இறந்த சிறுமியின் வாக்குமூல வீடியோ வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் காவல்துறை எதன் அடிப்படையில் மதமாற்றம் செய்ய முயற்சி நடக்கவில்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்தது. சிறுமியின் வாக்குமூலத்தில் தெளிவாக கூறப்பட்டிருப்பதை காவல்துறை மறுக்கிறதா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். இதனிடையே தமிழகம் முழுவதும் பிஜேபியினர் இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு நீதிவேண்டி தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

`

இதனிடையே இறந்த சிறுமியின் அடையாளங்களை வெளிப்படுத்துவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் பள்ளியில் கட்டாய மதமாற்றம் நடந்ததாக தகவல் எதுவும் இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பிரபல செய்தி நிறுவனமான பாலிமர் நேற்று இதுகுறித்த செய்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியை நேற்று மாலை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. பாலிமர் டிவி யாரால் மிரட்டப்பட்டது. எதற்காக மிரட்டப்பட்டது என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பிவருகின்றனர்.

```
```

பாலிமர் தனது செய்தியை நீக்கியது தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் தேசிய குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையம் சென்னை டிஜிபிக்கு விளக்க அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா