Monday, December 2, 2024
Home > செய்திகள் > முதுகுளத்தூர் அருகே பரபரப்பு..! அடித்துக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவர்..? திமுக ஆட்சியில் தொடரும் அவலம்..!

முதுகுளத்தூர் அருகே பரபரப்பு..! அடித்துக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவர்..? திமுக ஆட்சியில் தொடரும் அவலம்..!

5-12-21/19.39pm

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே விசாரணைக்கு கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு .வருகின்றனர்.

திமுக ஆட்சியில் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் வேளையில் தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் தொடர் கொலைகள் மற்றும் கொள்ளைகள் தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் திமுக தொண்டர்களே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே விசாரணைக்கு செல்லப்பட்ட மாணவன் அடித்து கொலை செய்யப்பட்டதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். முதுகுளத்தூர் அருகே உள்ள மேலதூவல் கிராமத்தில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்த நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் நிற்காமல் சென்றிருக்கிறார்.

`

காவலர்கள் விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கே காவலர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. நேற்று மாலை காவல்நிலையத்திலிருந்து அவரது பெற்றோருக்கு தொலைபேசியில் செய்தியை தெரிவித்து மாணவரை அழைத்து செல்லுமாறு கூறியிருக்கின்றனர். அதன் பின்னர் அவரை அழைத்து செல்ல வருகையில் மாணவரின் உடல்நிலை மோசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் நடக்க முடியாத அளவிற்கு மோசமாக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. வீட்டுக்கு சென்ற மாணவர் மூன்றுமுறை ரத்தவாந்தி எடுத்திருக்கிறார். பின்னர் இரவில் தூங்க சென்ற அவர் காலையில்சடலமாக இருந்ததாக தெரிகிறது. அதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பரமக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

```
```

திமுக ஆட்சியில் காவல்துறையும் அராஜக போக்கை கையாள்வதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் லக்ஷ்மி காவலர் ஐயப்பன் செந்தில் மற்றும் பிரேம் குமார் உட்பட ஆறுபேர் மீது கொலை வழக்கு பதியவேண்டும் என பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து கூட்டத்தை கலைத்தனர். திமுக ஆட்சியில் தொடர் கொலைகள் நடைபெறுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

….உங்கள் பீமா