கோயம்புத்தூர் : தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க மாநாடு கோவையில் நேற்று நடைபெற்றது. அதில் ஹெச்.ராஜா அர்ஜுன் சம்பத் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் பாத்திமா அலி போன்றோர் கலந்து கொண்டனர்.
தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க மாநாடு கடந்த வருடம் திருச்சியில் நடைபெற்றது. வலதுசாரி ஊடகவியலாளர்களின் ஆதரவு பெருகவே இந்த வருடம் கோயம்புத்தூரில் பல தலைவர்கள் தலைமையேற்று இந்த விழாவை சிறப்பித்தனர். இந்த கூட்டத்தில் பேசிய பல பத்திரிக்கையாளர்கள் தமிழகத்தில் தற்போது நிலவும் கருத்து சுதந்திர பறிப்பு பற்றி விவாதம் மேற்கொண்டனர்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என குரல் கொடுத்தது. ஆனால் தற்போது விமர்சனத்தை முன்வைத்தாலே கைது குண்டர்சட்டம் என பத்திர்கையாளர்களை மிரட்டுகிறது என கூட்டத்தில் பேசப்பட்டது.
மேலும் இடது சாரி ஆதிக்கம் கொண்ட ஊடகங்களில் எவ்வாறு வலது சாரி சித்தாந்தத்தை மக்களுக்கு எடுத்துரைப்பது எனவும் தேசிய பொது நீரோட்டத்திற்கு மக்களை எப்படி திசை திருப்புவது எனவும் விவாதிக்கப்பட்டது. அர்ஜுன் சம்பத் ஹெச்.ராஜா டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் இதில் சிறப்புரை ஆற்றினர்.
….உங்கள் பீமா