5-12-21/17.35pm
கன்னியாகுமரி ; காங்கிரசில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் அதற்க்கு எதிர்க்கட்சியாக இருக்க கூட தகுதியில்லை என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் கூறியிருந்தது நினைவிருக்கலாம். அதே போல கட்சிக்கு ஆள் சேர்க்க எந்த எல்லைக்கும் செல்லும் என காங்கிரஸ் மீண்டும் நிரூபித்துள்ளது.
சமீபத்தில் வெளியாயிருக்கும் திரைப்படம் ஒன்றிற்கு டிக்கட் இலவசமாக தருகிறோம் என கூறி கோயம்புத்தூர் காங்கிரசார் அளித்திருக்கின்றனர். அதை நம்பி சென்ற பெண்களிடம் நீங்கள் காங்கிரசில் உறுப்பினர் ஆனால் மட்டுமே டிக்கட் தருவோம் என கூறி மிரட்டியிருக்கின்றனர். இதனால் கொந்தளித்த பெண்கள் தியேட்டர் வாசலிலேயே கூச்சலிட அரங்க மேலாளர் மற்றும் காவலர்கள் வந்து நிலைமையை சார் செய்துள்ளனர். இந்த செய்தியை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வீடியோவாக வெளியிட்டிருந்தது.
இந்த பரபரப்பு அடங்குமுன்னர் நேற்று கோட்டார் பகுதியில் சிலரை காவல்துறை அமுக்கியுள்ளது. நாகர்கோவில் மற்றும் அதன் இருக்கும் இளம்பெண்களிடம் “பிரதமர் மோடி இலவச எரிவாயு திட்டத்தின் கீழ் உங்களுக்கு எரிவாயு இணைப்பு வாங்கி தருகிறோம். அதனால் உங்கள் அலைபேசி எண் மற்றும் ஆதார் விவரங்களை கொடுங்கள்” என நச்சரித்து வாங்கியதாக தெரிகிறது.
இந்த தகவலறிந்த பிஜேபியினர் அங்கு சென்று காங்கிரஸாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கோட்டார் சரக உதவி ஆய்வாளர் சரவணன் அந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினார். மேலும் அவர்களிடம் இரண்டு இரண்டு செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேசிய கட்சியான காங்கிரசின் இந்த செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.
….உங்கள் பீமா