06-12-21/5.50am
கோயம்பத்தூர் : அப்பாவி பெண் ஒருவரை சூப்பர்வைசர் எனும் போர்வையிலுள்ள கொடூரன் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் அமைந்துள்ளது கற்பகம் மில். இங்கு வெளிமாநில பெண் மற்றும் ஆண் தொழிலாளிகள் இருபாலரும் பணிபுரிகின்றனர். சம்பவநாளன்று ஜார்கண்டை சேர்ந்த ஒரு பணியாளர் வேலைக்கு வரவில்லை என கூறி அவரை மில் பணியாளர் தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து சரவணம்பட்டி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது வழக்கு பதிந்து மேல்நடவடிக்கைகள் எடுத்து வருகிறன்றனர். இதே போல ஒரு சம்பவம் அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் பிரதமர் மோடி வரை இழுக்கப்பட்டிருப்பார். ஆனால் திமுக ஆட்சியில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் அனைத்தையும் வெளியில் தெரியாமல் ரகசியமாக மூடிவைப்பதே ஊடகங்களின் வேலை என கோயம்புத்தூர் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவை தருமபுரி எம்பி செந்தில் பகிர்ந்திருந்தார். பதிவில் புதியதலைமுறை நிருபர் ஒருவர் ஓடிவந்து சார் அரெஸ்ட் பண்ணிட்டாங்க என பதிலளித்துள்ளார். கோயம்புத்தூர் மட்டுமல்ல சென்னையில் உள்ள பல பிரபல ஜவுளிக்கடைகளில் கூட இதே போல அக்கிரமங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் திமுக எம்பிக்கள் சென்னையிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா