Friday, February 7, 2025
Home > செய்திகள் > செஸ் வீராங்கனைக்கு காங்கிரஸ் செய்த துரோகம்..? வீராங்கனை வெளியிட்ட வீடியோ..!

செஸ் வீராங்கனைக்கு காங்கிரஸ் செய்த துரோகம்..? வீராங்கனை வெளியிட்ட வீடியோ..!

25-11-21/11.27am

பஞ்சாப் : உலக அளவில் நடந்த செஸ் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு துரோகம் செய்துவிட்டதாக பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்தவர் மாலிகா ஹண்டா. இவர் பிறவியிலேயே காதுகேளாதவர் மற்றும் வாய் பேச முடியாதவர். இவர் சிறுவயதிலிருந்தே தனது விடா முயற்சியாலும் அயராத உழைப்பாலும் மனோதிடத்தாலும் செஸ் விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வாங்கியுள்ளார். மேலும் தேசிய அளவில் தொடர்ந்து ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே வீராங்கனை மாலிகா ஹண்டா மட்டுமே.

இவர் ஆறுமுறை உலக அளவில் நடந்த போட்டிகளில் இந்தியாவுக்காக கலந்துகொண்டு ஆறு முறையும் பதக்கங்களை வாங்கியுள்ளார்.இதில் இரண்டு தங்க பதக்கங்களும் அடங்கும்.தேசிய அளவில் நடந்த போட்டிகளில் எட்டுமுறை தங்கப்பதக்கங்களை அள்ளியிருக்கிறார். இவரது நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது. கடந்த வருடம் 2020 ல் நடந்த தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்ற இவரை பஞ்சாப் காங்கிரஸ் வீரர்கள் வீராங்கனைகள் பட்டியலில் சேர்க்கவில்லை என தெரிகிறது.

`

விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட தயாள்சந்த் விருதுக்கு மாலிகாவின் பெயரை காங்கிரஸ் மத்திய அரசுக்கு பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டது. பெண்கள் உரிமை பெண்கள் அதிகாரம் என தொண்டை கிழிய கதறும் காங்கிரஸரின் மாநிலத்தில் பெண் வீராங்கனைக்கு நடக்கும் இந்த அவலத்தை ஊடகங்களும் வெளியில் சொல்லாமல் இருப்பது ஜனநாயக ஊடகங்கள் மீதான நம்பிக்கையும் பெண்கள் பற்றி மேடைக்கு மேடை பேசும் காங்கிரசின் மீதான நம்பிக்கையும் முற்றும் குலைப்பதாக இந்த சம்பவம் அமைந்துவிட்டது.

மேலும் இவருக்கு பஞ்சாப் காங்கிரஸ் சார்பில் ரொக்கப்பணமோ பரிசுகளோ கொடுக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

```
```

வாய் பேச முடியாத காதுகேளாத அந்த அபலை வீராங்கனை கண்ணீர்மல்க வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்பவர் நெஞ்சை கனக்க செய்கிறது.

…..உங்கள் பீமா