Saturday, May 2, 2026
Home > செய்திகள் > ஹனுமான் சாலிசா..! எம்பி மற்றும் எம். எல்.ஏ மீது தேசத்துரோக வழக்கு

ஹனுமான் சாலிசா..! எம்பி மற்றும் எம். எல்.ஏ மீது தேசத்துரோக வழக்கு

25-4-22/12.11PM

மஹாராஷ்டிரா : மஹாராஷ்டிரா முதல்வரின் இல்லத்தில் அமைந்துள்ள மும்பை மோடோஸ்ரீ இல்லத்தருகே ஹனுமான் சாலிசா பாட அழைப்பு விடுத்த அரசியல்தம்பதிகள் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளது.

மஹாராஷ்டிரா அமராவதி தொகுதி பெண் எம்பியான நவநீத் ராணா மற்றும் அவரது கணவரும் அமராவதி பத்னேராவின் சட்டமன்ற உறுப்பினருமான ரவி ராணாவும் முதல்வர் உத்தவதாக்கரே வீட்டின் முன் ஹனுமான் சாலிசா பாட தொண்டர்களை அழைத்ததால் உத்தவதாக்கரேவின் காவல்துறை தம்பதியினரை கைதுசெய்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களை கைதுசெய்த போலீசார் தேசத்துரோக வழக்கை பதிவுசெய்துள்ளனர். நேற்று மும்பை நீதிமன்றத்தில் போலீசார் அவர்களை ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதையடுத்து எம்பி சுயேச்சை எம்பியான ராணாவை பைகுல்லா சிறையிலும் சுயேச்சை எம்.எல்.ஏவான ரவியை நவி மும்பையில் உள்ள தலேஜா சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது ஐபிசி 124 தேசத்துரோக வழக்கு, ஐபிசி 153ஏ, மற்றும் சட்டப்பிரிவு 34, சட்டப்பிரிவு 37(1), 135, 124ஏ உட்பட பலப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். எம்பி மற்றும் எம்.எல்.ஏ இவர்களை கைது செய்ய சிறப்பு நீதிமன்ற உத்தரவு வேண்டும். மேலும் அவர்களை அந்த நீதிமன்றமே விசாரிக்கும். ஆனால் உத்தவ் தாக்கரே தமிழக திமுக போல சர்வாதிகாரமாக செயல்பட்டுவருவதாக அரசியல்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா