Monday, November 11, 2024
Home > செய்திகள் > பொய் செய்தி பரப்பியதா சன் குழுமம்..! உத்திரபிரதேசத்தில் விநாயக சதுர்த்தி தடையா..!!?

பொய் செய்தி பரப்பியதா சன் குழுமம்..! உத்திரபிரதேசத்தில் விநாயக சதுர்த்தி தடையா..!!?

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் பத்திரிக்கை ஊடகங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். “ஒவ்வொரு கட்சிகளும் தனக்கான ஊடகத்தை வைத்துக்கொண்டு தங்களின் நற்செயல்பாடுகளை, அமல்படுத்திய நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவே கட்சிக்கான ஊடகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் தற்போது தங்களின் சுய விளம்பரத்திற்கும் தங்கள் கொள்கைக்கு முரணான கட்சிகளின் மீது சேற்றைவாரி இறைக்கவுமே பயன்படுகிறது.” என சில மூத்த பத்திரிக்கையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழக ஊடகங்கள் செய்தியை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதாக மக்களிடையே பரவலாக பேச்சு அடிபடுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் திமுகவின் அதிகாரபூர்வமற்ற செய்தி நிறுவனமான சன் நியூஸ் தற்போது ஒரு கட்டுக்கதையை திரித்து சொல்லியிருக்கிறது.

`

உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துவிட்டார் என செய்தி ஒளிபரப்புகிறது. ஆனால் உத்திர பிரதேச முதல்வர் யோகி இன்று அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் பிறகு,

” கோவிட் தொற்று 66 மாவட்டங்களில் பூஜ்ஜியம் என்ற நிலையில் உள்ளது. 31 மாவட்டங்களில் கோவிட் தொற்றே இல்லை எனும் நிலையில் மீண்டும் மக்கள் பொது இடத்தில் கூட அனுமதிப்பது முடியாத விஷயம். அது போல மக்களின் கருத்துக்கு மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்கிறது.

அதனால் கோவில்களில் சிலைகளை வைத்து வணங்குவதற்க்கோ வீட்டில் வைத்து வணங்குவதற்க்கோ அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. மாறாக பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்படுகிறது. கூட்டம் கூடி அதனால் மக்களுக்கு மீண்டும் நோய்தொற்று வர அரசு விரும்பவில்லை.” இவ்வாறு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

```
```

https://t.co/4olG8ClnIV?amp=1

அதாவது எந்த கோவில்களிலும் வழிபாடு நடத்த தடை இல்லை. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை கோவிலுக்கு செல்லவும் தடை, தெரு ஓரங்களில் சிலை வைத்து வழிபடவும் தடை. யோகி அவர்களின் அறிவிப்பை திரித்து கூறிய சன் குழுமம் எப்போதுமே இதே போல செய்திகளை திரித்துக்கூறுகிறது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா