1999ல் உலக சினிமாவையே புரட்டி போட்டு வரலாறு படைத்த சீக்வல் மேட்ரிக்ஸ். செயற்கை நுண்ணறிவுள்ள இயந்திரம் மனிதர்களை ஆட்டுவிக்கும் இந்த வித்தியாசமான கதையை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் வில்லேஜ் ரோட் ஷோ இணை தயாரிப்பில் வெளியான மேட்ரிக்ஸ் 1999ல் வசூலை வாரி குவித்தது.

அதுவரை பெரிதும் அறிமுகமில்லாத கெனு ரீவ்ஸ் உலகின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள சினிமா ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தார். இந்த படத்தின் கதை எழுதி இயக்கியவர் லானா வாக்கோவ்ஸ்கி. கடந்த மூன்று பாகங்களையும் எழுதி இயக்கியவர் தற்போது இதன் அடுத்த பாகமான மேட்ரிக்ஸ் ரெஸ்சுரெக்சன் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
மனம் கவர்ந்த நியோ கதாபாத்திரத்தில் கெனு ரீவ்ஸ் பட்டையை கிளப்பியிருக்கிறார். முடியாத பாத்திரங்களான ஏஜென்ட் ஸ்மித், மார்பியஸ், ட்ரினிட்டி என அனைவரும் ரசிகர்களை கிறங்கடிக்க காத்திருக்கிறார்கள்.

தமிழ் திரைப்படங்களில் எம் என்.நம்பியாரை எப்படி ரசித்தோமோ அதே போல அதைவிட அதிகமாக ரசிக்கப்படும் வில்லன் கதாபாத்திரம் இந்த ஏஜென்ட் ஸ்மித். இந்த கதாபாத்திரத்தை ஏற்று பின்னி பெடலெடுத்திருப்பவர் ஹுகோ வாலஸ் வீவிங்.


ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த மேட்ரிக்ஸ் ரெஸ்சுரெக்ஸன் டிசம்பர் மாதம் 22 அன்று வெளியாக உள்ளது. அதன் ட்ரைலர் இன்று மாலை வெளியாகியுள்ளது. நான்கு மணி நேரத்தில் நான்கு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
கெனு ரீவ்ஸ்சுக்கு இந்த திரைப்படம் மற்றுமொரு மைல் கல்லாக அமையும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.