Friday, February 7, 2025
Home > செய்திகள் > சாலையிலிருந்து கீழே விழுந்த கார்..! எம்.எல்.ஏ மகன் உட்பட ஏழுபேர் பலி..?

சாலையிலிருந்து கீழே விழுந்த கார்..! எம்.எல்.ஏ மகன் உட்பட ஏழுபேர் பலி..?

25-1-22/12.25pm

மும்பை : கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. இந்த காரில் 12 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

திங்கட்கிழமை நடந்த இந்த விபத்தில் சட்டமன்ற உறுப்பினரின் மகன் உட்பட ஏழுபேர் பலியாகியுள்ளனர். மும்பை வார்தா பகுதியில் அமைந்துள்ளது சவாங்கி மருத்துவக்கல்லூரி. இந்த கல்லூரியில் பயிலும் நீரஜ் சவுகான் விவேக் நந்தன், பிரதியுத் சிங், ஜெய்ஸ்வால் என நான்கு பைனல் இயர் மாணவர்களும் அவிஷ்கார் ரஹாங்கடேல், பவன் ஷக்தி என முதலாம் ஆண்டு மாணவர்களும் மற்றும் இன்டெரிம் பயின்று வந்த நிதீஷ் சிங் என்பவரும் தியோலி பகுதியிலிருந்து வார்தாவுக்கு காரில் வந்துகொண்டிருந்தனர்.

கார் செல்சுரா கிராமத்திற்கருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி பாலத்திலிருந்து கீழே விழுந்தது. அதில் பலத்த சேதமடைந்த காரில் பயணித்த ஏழு மாணவர்களும் சம்பவஇடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

`

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் நள்ளிரவு 1.30அளவில் விபத்து நடந்துள்ளது எனவும் காட்டு விலங்கு ஒன்று குறுக்கே வந்ததில் அதில் மோதாமல் தவிர்க்க முயன்ற போது கார் நிலைதடுமாறி கீழேவிழுந்திருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

```
```

மேலும் உயிரிழந்த அவிஷ்கார் ரஹாங்கடேல் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் விஜய் ரஹாங்கடேல்அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்சமும் காயமடைந்தோர் குடும்பத்திற்கு 50000மும் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.

….உங்கள் பீமா