Saturday, July 27, 2024
Home > செய்திகள் > தமிழக அரசுக்கு 60 நாள் கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்..!! கடைபிடிப்பார்களா கட்சி உறுப்பினர்கள்..!??

தமிழக அரசுக்கு 60 நாள் கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்..!! கடைபிடிப்பார்களா கட்சி உறுப்பினர்கள்..!??

அரசியல் தலைவர்கள் மற்றும் சாதிய தலைவர்களின் புகைப்படத்தை வாகனங்களிலிருந்து நீக்க கோரிய பொது நல மனு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்தவழக்கை விசாரித்த அமர்வு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் நீதிபதி புகழேந்திரன் ஆகியோர் அதிரடி தீர்ப்பு வழங்கினர்.

இந்த பொதுநல மனுவோடு தமிழக டிஜிபி தரப்பில் கொடுக்கப்பட்ட அபிடவிட்டையும் விசாரித்த நீதிபதிகள்” அரசியல் தலைவர்கள் மற்றும் சாதிய தலைவர்களின் புகைப்படத்தை சலுகைகள் பெறவும் சட்டத்தை மீறவுமே பயன்படுத்துகிறார்கள். தமிழக காவல்துறை கூற்றுப்படி வாகனத்தில் தலைவர்கள் படம் இடம்பெற்றிருப்பதால் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதாக சொல்லப்படுகிறது.

`

இது சட்டத்தை மீறும் செயல் ஆகும். காவல்துறை கொடி மாட்டிய அல்லது தலைவர்கள் புகைப்படம் உள்ள வாகனத்தை நிறுத்தும்போது பின்னால் உள்ள பயணிகள் போலீசாருடன் வாதம் செய்வதாகவும், அவர்கள் பணியை செய்யவிடாமல் மிரட்டுவிட்டதாகவும் காவல்துறையினர் தரப்பு சொல்கிறது.

```
```

இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து பார்த்தே இந்த நீதிமன்றம் தீர்ப்பை வழங்குகிறது. இனி எந்த தலைவர் படமோ அல்லது கட்சியோ அல்லது அமைப்பின் கொடியோ அது வாகனத்தின் உள்ளேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இனி எந்த வாகனத்தின் முகப்பிலும் கொடியோ படமோ இடம்பெற கூடாது. இந்த நடைமுறையை இன்னும் 60 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும்.” என உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

…உங்கள் பீமா