Saturday, July 27, 2024
Home > செய்திகள் > வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி..! எம்.ஆர் காந்தி மட்டும்தான் களப்பணி செய்ய வேண்டுமா..?

வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி..! எம்.ஆர் காந்தி மட்டும்தான் களப்பணி செய்ய வேண்டுமா..?

14-11-21/ 9.25am

கன்னியாகுமரி : சென்னை மழையில் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் விட பல மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது கன்னியாகுமரி. பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி அவர்களை தவிர யாரும் உதவி செய்ய வரவில்லை என கன்னியாகுமரி மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த மழையால் சென்னை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் ஆளும்கட்சியினர் போராட்டம் செய்த மக்களை அடித்து விரட்டினர். உதவி செய்த பிஜேபியினரை நேரடியாக திமுக அமைச்சரே மிரட்டிய காணொளியை தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் பெய்த மழையை மறைத்த ஊடகங்கள் கன்னியாகுமரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தையும் மறைக்கிறது என குற்றசாட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்பியான வசந்த் தந்து தொகுதி மக்களை கண்டுகொள்ள மறுக்கிறார் என குற்றசாட்டு எழுந்து வருகிறது.

`

பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை செய்து வருகிறார். மேலும் வெள்ளநீரை மோட்டார் மூல அகற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பொதுமக்களிடம் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

```
```
https://twitter.com/STRGuy_/status/1459530246844076034?s=20

கன்னியாகுமரி மக்கள் வெள்ளத்தை கூட தங்கள் பொழுதுபோக்கு கருவியாக பயன்படுத்திக்கொண்டு மகிழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

….உங்கள் பீமா