Wednesday, May 29, 2024
Home > செய்திகள் > மதுரையில் பரபரப்பு..! எழுத்தாளர் மாரிதாஸ் அதிரடி கைது..!? தொடரும் அராஜகம்..? வீடியோ தொகுப்பு..!

மதுரையில் பரபரப்பு..! எழுத்தாளர் மாரிதாஸ் அதிரடி கைது..!? தொடரும் அராஜகம்..? வீடியோ தொகுப்பு..!

9-12-21/16.10pm

மதுரை : எழுத்தாளர் மாரிதாஸ் அவர்களை மதுரை காவல்துறையினர் வீடுபுகுந்து கைது செய்த்தாக கூறப்படுகிறது. தடுக்க வந்த ரஜினி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மிரட்டி அனுப்பப்பட்டனர். இதனால் மதுரையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

எழுத்தாளர் மாரிதாஸ் திமுகவின் ஊழல்கள் மற்றும் அதன் உண்மை முகத்தை தனது சேனல் மூலம் தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறார். இவருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதனால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது வீடியோக்கள் பல ஆதாரபூர்வமாக இருப்பதால் ஆளும் கட்சியான திமுகவுக்கு பெரும் குடைச்சலை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை முதலே எழுத்தாளர் மாரிதாஸ் வீட்டின் முன்பு போலீசார் திடீரென குவிக்கப்பட்டனர். மேலும் அவரை கைது செய்ய முயன்றபோது ரஜினி ரசிகர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டின் முன் குவிந்தனர். போலீசாருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையே வீட்டிற்குள் அத்து மீறி புகுந்த காவல்துறையினர் மாரிதாஸை கைது செய்ய முயன்றனர்.

`

மாரிதாஸ் போலீசாரிடம் ” என்ன காரணத்திற்க்காக என்னை கைது செய்ய வந்திருக்கிறீர்கள் எதுவும் சம்மன் இருக்கிறதா. எதற்கு முன்னரே கைதுசெய்ய போகும் தகவல் தெரிவிக்கவில்லை” என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதையெல்லாம் பொருட்படுத்தாத காவல்துறை அவரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளது.

```
```

மேலும் முதுகுளத்தூரில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் மணிகண்டன் குறித்து தவறான கருத்துக்களை மாரிதாஸ் கூறியதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் இதே போல அதிரடியாக எந்த ஒரு காரணமும் இல்லாமல் திடீரென பாஜக பிரமுகர் கல்யாணராமன் அவர்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியின் அராஜக போக்கை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது என மாரிதாஸின் ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

…..உங்கள் பீமா