Friday, June 2, 2023
Home > தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம் > தெரிந்து கொள்வோம்.. விமானத்தின் கருப்பு பெட்டி..! வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்..!

தெரிந்து கொள்வோம்.. விமானத்தின் கருப்பு பெட்டி..! வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்..!

10-12-21/5.47am

பிளைட் ரெகார்டர் என அழைக்கப்படும் கருப்பு பெட்டி ஒரு தகவல் தொழில் நுட்பக்கருவி என கூறலாம். விமானங்கள் ஹெலிகாப்டர்கள் அசாதரண நிகழ்வில் சிக்கும்போது அந்த சமத்துவம் எப்படி நிகழ்ந்தது என இந்த பிளாக் பாக்ஸால் நாம் அறிந்து கொள்ள முடியும்.

இந்த கருவி சேதம் குறைவாக காணப்படும் விமானத்தின் பின்பகுதியிலேயே பொருத்தப்பட்டிருக்கும். இந்த பிளாக்பாக்ஸ் பொதுவாக செம்மஞ்சள் நிறத்திலேயே காணப்படும். இந்த கருவியில் இரு அறைகள் உண்டு. ஒன்றில் விமான ஓட்டிகளுக்கும் தரைக்கட்டுப்பாடு மையத்திற்குமான உரையாடலை பதிவு செய்யும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேர உரையாடலை சேமித்து வைக்கும் என கூறப்படுகிறது.

பிளாக் பாக்சின் இன்னொரு பகுதியில் விமானம் சென்ற வேகம் எவ்வளவு உயரத்தில் பறந்தது மற்றும் காற்றின் அழுத்தம் விமானத்தில் உள்ள பாகங்களின் செயல்பாடுகள் விமானத்திற்குள் உள்ள காற்றழுத்தம் என நானூறுக்கும் மேற்பட்ட காரணிகளை பதிவு செய்கிறது. விமானம் விபத்துக்குள்ளானால் பிளாக் பாக்சில் உள்ள காக்பிட் வாய்ஸ் ரெகார்டரிலிந்து தொடர்ந்து 30 நாட்கள் சமிக்ஞைகள் வந்து கொண்டே இருக்கும். இதை வைத்தே விமானத்தின் இருப்பிடத்தை அசம்பாவிதம் நிகழ்ந்த இடத்தை அறிந்து கொள்ள முடியும்.

`

பிளாக் பாக்ஸ் டைட்டானியம் என்ற தனிமத்தால் செய்யப்படுபவையாகும். புவி ஈர்ப்பு விசையை விட 3400 மடங்கு விசையையும் 1000 0 C ஐவிடவும் அதிக வெப்பநிலையையும் தாங்கவல்லது. இது சுமார் 13 பவுண்டுகள் எடையைக் கொண்டவையாகும். தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தகவல்கள் மிக பாதுகாப்பாக இருக்கும்.

……உங்கள் பீமா