2-4-22/10.11AM
சென்னை : தமிழக பிஜேபியில் அண்ணாமலை வரவிற்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதிலும் அண்ணாமலை தலைமை பொறுப்பேற்ற பிறகு இளைஞர்கள் அதிக அளவில் பிஜேபியில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர்.
அதைத்தொடர்ந்து அண்ணாமலைக்கு தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரடியாக கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது. கமலாலயத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மேலும் அண்ணாமலை அவர்களுக்கு மாநில அரசால் வழங்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பை திமுக அரசு குறைத்து எக்ஸ் பிரிவு பாதுகாப்பை வழங்கியது.

இதனிடையே நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த யூசுப் என்பவன் அண்ணாமலை தலை துண்டிக்கப்படும் என சமூகவலைத்தளத்தில் மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து மத்திய நுண்ணறிவுத்துறை களமிறங்கி தனது விசாரணையை ஆரம்பித்ததாக தெரிகிறது. நுண்ணறிவு தனது அறிக்கையை நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கியதாக தெரிகிறது.

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதை நுண்ணறிவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நான்காவது பெரிய பாதுகாப்பு அமைப்பு இதுவாகும். இந்த ஒய் பிரிவின்கீழ் 11 சிஆர்பிஎப் ராணுவ துணைப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை அவர்களை சுற்றி இனி ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
…..உங்கள் பீமா
