7.12.21/14.51pm
சென்னை : இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஆட்சியை பற்றி சாதகமாக எழுதினால் மட்டுமே அரசு சார்பில் விளம்பரம் தருவேன் என முதல்வர் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேற்கு வங்க முதல்வரான மமதா பானர்ஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் ” ஆட்சிக்கு சாதகமாக எவ்வளவு எழுதுகிறீர்களோ அவ்வளவு அரசு விளம்பரம் கிடைக்கும் ” என கூறினார். மமதாவின் சர்வாதிகார போக்குக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என எதிர்கட்சியினர் விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.
“மேற்கு வங்கத்தில் நடக்கும் பல அவலங்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. மேலும் அரசியல் எதிரிகள் எதிர் கட்சி தொண்டர்கள் என பலர் படுகொலை செய்யப்பட்ட தகவல்கள் கூட வெளிவருவதில்லை. இதற்கெல்லாம் ஊடகங்களுக்கு கையூட்டு கொடுக்கிறார் மமதா. இந்த உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மமதாவே தனது வாயால் ஒப்புக் கொண்டுள்ளார்” என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.
……உங்கள் பீமா