7-12-21/ 15.46pm
சென்னை : திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள சென்ற புகைப்படத்தை பகிர்ந்து தெலுங்கு ஷூட்டிங்கா என இளம் பிஜேபி தலைவர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
“திமுக தலைவர் முக ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் தெரியாமல் ரகசிய விசிட் அடிப்பது வழக்கம். ஆனால் அவர் செல்லும் இடங்களில் சாமியானா திடீரென முளைத்த சிமெண்ட் ரோடு காணப்படுவது ஸ்டாலினின் விசிட் போல மர்மமானது. இதைவிட பெரும் ரகசியம் கேமராக்களுடன் ஆய்வு நடக்கும் இடத்திற்கு முன்னரே வந்து நிற்கும் பத்திரிக்கையாளர்கள்” என பிஜேபியை சேர்ந்த வளர்ந்து வரும் தலைவர் ஒருவர் விமர்சித்தார்.
இந்நிலையில் பிஜேபி தலைவர்களுள் ஒருவரான வினோஜ் பி செல்வம் திமுக தலைவர் முக ஸ்டாலின் பற்றி கூறுகையில் ” திமுக இரட்டை வேடம் போடுகிறது. கடந்த ஆட்சியில் எதிர்த்து போராடிய திட்டங்களை ஆட்சிக்கு வந்ததும் நிறைவற்ற துடிக்கிறது. மக்களை திமுக ஏமாற்றுகிறது” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் தனது பதிவு ஒன்றில் “2010ல் விமானநிலைய விரிவாக்க பணிகளுக்கு முக ஸ்டாலின் அனுமதி கொடுத்துள்ளார். ஆனால் 2018-ல்நிலம் கையகபடுத்துவதை எதிர்த்து அவரே போராட்டம் நடத்தினார். 2021 செப்டம்பர்- நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவக்கம் என அறிவித்தார்.

ஆனால் 2021 டிசம்பரில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல். அவசர ஆலோசனை நடைபெறுகிறது என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.” என பதிவிட்டுள்ளார். மேலும் தெலுங்குப்பட ஷூட்டிங்கா என கேட்டவரின் பதிவை பகிர்ந்து திமுக நாடக கம்பெனி என மறைமுகமாக சொல்வதாக தெரிகிறது.

…..உங்கள் பீமா