13-2-22/16.10pm
சென்னை : மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் மாநில சட்டசபையை மறு அறிவிப்பு வரும்வரை ஒத்திவைத்ததோடு மட்டுமல்லாமல் அடுத்து ஆரம்பிக்கப்போகும் சட்டமன்ற கூட்டத்தொடர் தனது உரையுடனேயே ஆரம்பிக்கப்படவேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தார்,

ஆளுநரின் இந்த செயலுக்கு இந்தியாவில் உள்ள எந்த முதல்வரும் கண்டனமோ அல்லது கருத்தோ கூறாத நிலையில் முதல் ஆளாக முந்திக்கொண்டு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ” மேற்குவங்க சட்டசபையை ஒத்திவைத்தது சட்டதிட்டங்களுக்கு எதிரான செயல். மாநிலத்தின் முன்னோடியாக இருந்து அரசியலமைப்பை வழிநடத்தி செல்வதே ஆளுநரின் வேலை.ஜனநாயகத்தின் அழகே ஒருவரையொருவர் மதித்து நடப்பதே” என பதிவிட்டிருந்தார்.
இதற்க்கு பதிலளித்த ஆளுநர் ஜெகதீப் தங்கர் “முக ஸ்டாலினிடம் இதை எதிர்பார்க்கவில்லை. புரிதல் இல்லாமல் பதிவிட்டுள்ளார். மேற்குவங்க முதல்வர் மமதாவின் வேண்டுகோளுக்கிணங்கவே சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முக ஸ்டாலினின் புரிதலற்ற பதிவை ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.
மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் அமைதியாய் இருக்கும்போது முதல்வர் முக ஸ்டாலின் செய்த விமர்சனம் எங்கே சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தனது ஆட்சி கலைந்துவிடுமோ என்கிற பயத்தில் பதிவிட்டிருப்பதாக பிஜேபியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
….உங்கள் பீமா