7-12-21/12.25pm
முதுகுளத்தூர் : ஜெயராஜ் பெலிக்ஸ் மரண துயர நிகழ்வின் போது அந்த வழக்கு இந்தியா முழுவதும் எதிரொலித்தது. ஆனால் இரண்டு நாட்களில் இரண்டு துயரங்கள் அரங்கேறியபின்னும் சம்பவம் மேடையேறவில்லை என்பது பலத்த சந்தேகத்தை கிளப்புவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு நாட்களில் ஒரு வாலிபர் மற்றும் ஒரு முதியவர் உட்பட இரண்டு பேர் காவல்துறையினரால் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மரணமடைந்த சம்பவத்தில் காவல்துறையினர் முன்னுக்கு பின் முரணாண தகவலை அளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் கடந்த 2020 ல் நடந்த ஜெயராஜ் பெலிக்ஸ் வழக்கு திட்டமிட்டு பரப்பப்பட்டதாக பலர் சில ட்வீட்டுகளை ஆதாரமாக வெளியிட்டுள்ளனர்.
கனிமொழி எம்பி இறந்த பெலிக்ஸ் ஜெயராஜ் வீட்டிற்க்கே சென்று 25 லட்சம் நன்கொடையளித்தார். சிலநாட்கள் ஜெயராஜ் பெலிக்ஸ் பெயரிடப்பட்ட முக கவசத்தை அணிந்திருந்தார். மேலும் மனித உரிமை ஆணையத்திற்கு இது தொடர்பாக மனு ஒன்றையும் அனுப்பியிருந்தார். முக ஸ்டாலின் ஒருபடி மேலே போய் ஜனநாயக நாடா வேட்டைக்காடா என்றெல்லாம் கேள்வியெழுப்பியிருந்தார்.



இந்திய திரை பிரபலங்கள் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் என ஒருசேர ஜெயராஜ் பெலிக்ஸ் வழக்கிற்காக குரல் கொடுத்தனர். ஆனால் தற்போது யாரும் வாய் திறக்கவில்லை. அல்லது வாய் திறக்கவிடவில்லை. கடந்த அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கி அரசியல் லாபம் அடைய சிலர் செய்த சூழ்ச்சி இது என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



மேலும் மரணமடைந்த மணிகண்டன் மற்றும் லோகநாதன் இருவருக்கும் நீதி கிடைக்க கடவுளை பிரார்த்திப்போம்.

…..உங்கள் பீமா