Wednesday, August 19, 2026
Home > அரசியல் > பிஜேபி இளைஞரணி தேசிய செயலாளர் கைது..! கொதிக்கும் டெல்லி

பிஜேபி இளைஞரணி தேசிய செயலாளர் கைது..! கொதிக்கும் டெல்லி

6-5-22/15.11PM

புதுதில்லி : சட்டத்தையும் காவல்துறையும் எப்படி தங்களுக்கு சாதகமாகவும் எதிர்க்கருத்து கொண்டவர்கள் மீது பயன்படுத்தவேண்டும் என்பதை எதிர்கட்சிகளிடமிருந்து பிஜேபி கற்றுக்கொள்ளவேண்டும் என பிஜேபி அடிமட்டத்தொண்டர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் ஊழல் மற்றும் திறமையற்ற நிர்வாகம் ஆகியவற்றை தனது ட்விட்டர் பதிவின் மூலம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருபவர் தஜிந்தர் பால் சிங் பாகா. தி காஸ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை பற்றி கிண்டலடித்த கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்கவேண்டும் என தஜிந்தர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தின் முன் போராட்டத்தை நடத்தினார்.

இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எரிச்சலை கிளப்பியது. அதைத்தொடர்ந்து கெஜ்ரிவாலுடன் தஜிந்தர் வார்த்தைப்போர் நடத்திவந்தார். இதனால் மேலும் எரிச்சலான கெஜ்ரிவால் தஜிந்தரை பழிவாங்க கைதுநடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள ஆம் ஆத்மீ பிரமுகர் சன்னி அலுவாலியா பஞ்சாப் சைபர் க்ரைமில் அளித்த புகாரின்பேரில் பஞ்சாப் போலீசார் கைதுநடவடிக்கை எடுத்துள்ளனர்.

டெல்லி ஜனக்பூரில் உள்ள தஜிந்தர் பல் சிங் பாகா வீட்டில் நுழைந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் அவரை வலுக்கட்டாயமாக கைதுசெய்து இழுத்து சென்றிருக்கின்றனர். இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில் ” 10-12 கார்களில் வந்த போலீசார் எனது மகனை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றனர்{தமிழ்நாட்டில் பிஜேபி பிரமுகர் கல்யாணராமனை அடித்து இழுத்து சென்ற சமத்துவத்தை போல).

இந்த சம்பவத்தை எனது மொபைலில் படம்பிடிக்க முயன்றபோது போலீசார் வேறு அறைக்கு இழுத்து சென்று எனது முகத்தில் குத்தினர்” என செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் ஆட்கடத்தல் வழக்கு பதிவுசெய்துள்ளனர். இதனிடையே தஜிந்தர் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பஞ்சாப் போலீசார் மொஹாலி குருஷேத்ரா வழியில் செல்லும்போது ஹரியானா போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. பஞ்சாப் அரசு ஹரியானா போலீசார் தலையீடு குறித்து உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக அறிவித்துள்ளது.

…..உங்கள் பீமா