Monday, December 2, 2024
Home > செய்திகள் > 12 க்கு 12 சரியானதா மத்திய அரசின் கணக்கு..!? கதறிய எதிர்கட்சிகள்

12 க்கு 12 சரியானதா மத்திய அரசின் கணக்கு..!? கதறிய எதிர்கட்சிகள்

30-11-21/6.12am

டெல்லி : நேற்று நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் கணக்கு சரியாகிவிட்டதாக நெட்டிசன்கண் விமர்சிக்கும் வேளையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு வருகின்றன.

இந்த வருடம் நடக்கும் குளிர்கால தொடரை சீர்குலைக்க காங்கிரஸ் கூட்டணிக்கட்சிகள் மற்றும் பிஜேபிக்கு எதிரான கட்சிகளை அழைத்திருந்தது. இதற்காக சோனியா ராகுல் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு மம்தா செல்ல மறுத்துவிட்டார். இந்நிலையில் நேற்று ஆரம்பமான குளிர்கால கூட்டத்தொடரில் முதல் நாளில் காங்கிரஸ் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் தரக்குறைவாக நடந்து கொண்டனர்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான டோலா சென் சக கட்சி பெண் எம்பியான ஷாந்தா சேத்ரி என்பவரின் கழுத்தில் ஸ்கார்ப்பை போட்டு நெரித்து தள்ளினார். இருவரும் வெல் ஆப் தா ஹவுஸ் என அழைக்கப்படும் மதியின் வரை சென்று சேர்களில் உருண்டனர்.சட்டீஸ்கர் காங்கிரஸ் எம்பியான புலோ தேவி நீதம் என்பவர் காகிதங்களை கிழித்து மன்றத்தில் பறக்கவிட்டார்.

`

பினாய் விஸ்வம் மற்றும் இளமாறன் கரீம் ஆகியோர் டேபிள் ஆப் ஹவுஸ் இல் இருந்த காகிதங்களை பிடுங்கி கிழித்தெறிந்து கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டனர். டோலா சென் மீண்டும் சேர்களை தூக்கியெறிந்து போக்கு காட்டினார். சய்யா வர்மா என்ற எம்பி காகிதங்களை மன்றத்தின் மத்தியில் தூக்கியெறிந்தார்.

சிவசேனா எம்பிக்களான ப்ரியங்கா சதுர்வேதி மற்றும் நாசீர் ஹுசைன் காகிதங்களை கிழித்து மன்றத்தில் எரிந்து நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டனர். மேலும் நாசீர் ஹுசைன் சக கட்சி எம்பியான சஞ்சய் ரவுத்தை அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது வேண்டுமென்றே தள்ளிவிட்டார். ஆந்திர காங்கிரஸ் எம்பியான ரிபுன் போரா நாடாளுமன்றத்தில் உள்ள எல்.ஈ.டி டிவிக்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டாண்டை பிடித்து ஊஞ்சலாடினார். இப்படி எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே சபை மரபை மீறி அநாகரிகமாக நடந்து கூட்டத்தொடரை குலைக்க முயற்சி செய்தனர்.

```
```

ஆனால் அசராத துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயடு அந்த 12 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்க்கு சிவசேனா எம்பியான ப்ரியங்கா கடும் கண்டனங்களை தெரிவித்தார். ஆனால் இதே ப்ரியங்கா மஹாராஷ்டிராவில் 12 பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா