Friday, March 29, 2024
Home > செய்திகள் > மாலைக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும்..! முதலமைச்சருக்கு அண்ணாமலை கெடு

மாலைக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும்..! முதலமைச்சருக்கு அண்ணாமலை கெடு

19-4-22/15.41PM

மயிலாடுதுறை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மயிலாடுதுறை சென்றபோது திமுக கூட்டணிக்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டியதோடு மட்டுமல்லாமல் ஆளுநர் உயிருக்கு குறிவைக்கும் விதத்தில் கல்லெறிந்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அரசுமுறை பயணமாக காஞ்சிபுரம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டார். ஆளுநர் நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை குடியரசுத்தலைவர்க்கு அனுப்பாததை கண்டித்து ஆளுநர் செல்லும்வழியில் விடுதலைசிறுத்தை கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலர் கருப்புகொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

`

மேலும் அந்த கூட்டத்தில் இருந்த பலர் ஆளுநர் காரின்மீது கல்லெறிந்தததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிலரை போலீசார் கைதுசெய்துள்ளனர். ஆளுநர் உயிருக்கு குந்தகம்விளைவிக்கும் வகையில் செயல்பட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளை பிஜேபி தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் இதற்க்கு தார்மீக பொறுப்பேற்று இன்று மாலைக்குள் முதல்வர் மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது பதவிவிலக வேண்டும் என கூறியுள்ளார்.

```
```

அவர் தனது ட்விட்டரில் ” தன் கட்சியினுடைய சித்தாந்தம் தனது கண்களை மறைத்து அதன்மூலமாக முதலமைச்சர் பணியை சரியாக செய்யமுடியவில்லை என்ற நிலைமை வரும்போது அந்த பதவியில் இருந்து விலகுவது உத்தமம். இன்று நமது மேதகு ஆளுநருக்கு மயிலாடுதுறையில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மாநில அரசே முழுப்பொறுப்பு. இன்று திமுகவின் கூலியாட்கள் கவர்னரின் வாகனம் மீது கல்லெறிந்துள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.

…..உங்கள் பீமா