Friday, June 2, 2023
Home > செய்திகள் > மத்திய அரசுக்கு நிர்பந்தம்..! ஊடுருவல்காரர்களை ஊக்குவிக்கிறதா உச்சநீதிமன்றம்..??

மத்திய அரசுக்கு நிர்பந்தம்..! ஊடுருவல்காரர்களை ஊக்குவிக்கிறதா உச்சநீதிமன்றம்..??

30-11-21/ 5.42am

டெல்லி : ஊடுருவல்காரர்களை ஊக்குவிக்கும் விதத்தில் உச்சநீதிமன்றங்கள் செயல்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சமீபத்தில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அவர் குறிப்பிட்டதாவது சமூக வலைத்தளங்களில் நீதிபதிகள் நீதிமன்றங்கள் குறிப்பிட்டு ட்ரோல் செய்யப்படுகின்றனர் என வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் இதே நீதிமன்றம் சல்மான் குர்ஷித் எழுதிய சன் ரைஸ் ஓவர் அயோத்யா எனும் சர்ச்சைக்குரிய புத்தகத்தை தடை கோரிய வழக்கில் ” உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வாங்காதீர்கள்” என கூறியது குறிப்பிடத்தக்கது.

இதை குறிப்பிட்ட சில நெட்டிசன்கள் உங்களை ட்ரோல் செய்வது பிடிக்கவில்லையெனில் பார்க்காதீர்கள் படிக்காதீர்கள் என விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டிஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ரோஹிங்யா ஊடுருவல்காரர்களுக்கு குடிநீர் உணவு இருப்பிடம் ஆகியவற்றை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது.

`

ஆனால் இந்த உச்ச நீதிமன்றம் 2019ல் 1989-90 களில் காஷ்மீர் பண்டிட்டுகளை கொன்று குவித்த வழக்கை ஏற்றுக்கொள்ள மறுத்து டிஸ்மிஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஊடுருவல்காரர்களால் இந்திய பிரஜைகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் நிலவி வந்த வேலையில்லா திண்டாட்டம் உணவுப்பற்றாக்குறை ஆகிய சமூக இன்னல்கள் படிப்படியாக குறைந்து தேசம் முன்னேறி வரும் வேளையில் இதுபோன்ற உத்தரவுகள் இந்திய பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் ரோஹிங்யா அகதிகளால் அமீர் ஜவான் தாக்கப்பட்டது மற்றும் சமீபத்தில் அஸ்ஸாமில் போலிசார் கொல்லப்பட்டது ரயில்நிலையங்கள் தீவைக்கப்பட்டது என பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனிடையே இங்கு அகதிகளாய் இருக்கும் இலங்கை தமிழர்கள் பங்காளதேசிகள் போன்றவர்களுக்கே இன்னும் சரிவர அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் மேலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும் இந்திய பொருளாதாரத்தை மனதில் கொள்ளாமல் செயல்படுவதாகவும் உச்சநீதிமன்றத்தை நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சவூதி பாகிஸ்தான் பங்களாதேஸ் வளைகுடா நாடுகள் என பல நாடுகள் இருக்க இந்தியாவில் மட்டும் குடியேறுவது ஏன் எனவும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என கூறும் கூட்டம் எதற்கு இந்தியா வரவேண்டும் எனவும் பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகளை முன்வைக்கின்றனர். அரசியலமைப்புக்கு கட்டுப்படாத நீதிமன்றமே மக்களின் நம்பிக்கை. நீதிமன்றங்களின் தீர்ப்பிலோ உத்தரவிலோ யாரும் விமர்சனத்தை முன்வைக்க கூடாது என்பது மரபு. நீதி மன்ற தீர்ப்புக்களை மதிப்போம்.

…..உங்கள் பீமா