Sunday, October 1, 2023
Home > செய்திகள் > என்னோட பொண்ண கொடுங்கடா..! நெஞ்சை உலுக்கிய ஒரு தாயின் கதறல்..! ஊமையான ஊடகங்கள்..!

என்னோட பொண்ண கொடுங்கடா..! நெஞ்சை உலுக்கிய ஒரு தாயின் கதறல்..! ஊமையான ஊடகங்கள்..!

13-11-21/8.30am

சென்னை ; என்னோட பொண்ண கொடுங்கடா என தாய் கண்ணீர் விட்டு நெஞ்சிலடித்து கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை கண்ணீர் விட வைத்துவிட்டது. ஊடகங்கள் இதை ஒரு பெட்டி செய்தியாக கூட வெளியிடவில்லையே என ஆதங்கப்படுகின்றனர் பொதுமக்கள்.

சென்னையில் பெய்த கனமழையால் மாநகரமே வெள்ளக்காடானது. பல் இடங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. திருவிக நகர் திருவொற்றியூர் திநகர் வேளச்சேரி உட்பட பல இடங்கள் மழைநீரால் சூழப்பட்டும் திமுகவினர் எட்டிக்கூட பார்க்கவில்லை என கூறப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் பெற்றோர்களின் கவனக்குறைவால் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சிறுவனின் மரணத்தை ஊடகங்கள் நேரலையில் ஒளிபரப்பியது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த முக ஸ்டாலின் இந்த கொடுமை கண்டு பொங்கி எழுந்தார். ஜோதிமணி உட்பட பல எம்பிக்கள் நேரடியாக சம்பவ இடத்துக்கே சென்று ஒபாமா ஜோ பிடென் பெயர்களை தவிர அனைத்து அதிமுக பிஜேபி தலைவர்களையும் ஒருமையில் சாடினர்.

`

அதேபோல ஒவ்வொரு இறப்பிலும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் அரசியல் செய்வதாக பிஜேபி மற்றும் அதிமுகவினர் விமர்சனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சென்னையில் பெய்த மழையால் ஒரு சிறுமியின் உயிர் பறிபோனதை பற்றி எந்த ஒரு அரசியல் தலைவர்களோ அல்லது ஊடகங்களோ பேச முற்படவில்லை என்பது மிக கொடுமை.

```
```

சென்னை திருவெற்றியூர் கலைஞர் நகரை சேர்ந்த சிறுமி ஒருவர் மழைநீரில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சிறுமியின் தாயாரின் கூற்றுப்படி சிறுமி இறப்பதற்கு முன் மின்சாரத்தால் தாக்கப்பட்டு மழைநீரில் தூக்கிவீசப்பட்டு பல மணி நேரம் உயிருக்கு போராடியிருக்கிறார். துடிதுடித்துக் கொண்டிருந்த சிறுமியின் அருகே யாரும் செல்லவில்லை என கூறி கண்ணீர் விட்டு அழுதார். அந்த தாயின் கண்ணீர் பார்ப்பவர் நெஞ்சை உலுக்கியது

…..உங்கள் பீமா