Saturday, July 27, 2024
Home > செய்திகள் > பெண்களை போகப்பொருளாக பார்க்கிறதா காங்கிரஸ்..? பெண்ணியவாதிகள் கண்டனம்..!

பெண்களை போகப்பொருளாக பார்க்கிறதா காங்கிரஸ்..? பெண்ணியவாதிகள் கண்டனம்..!

30-11-21/6.36am

டெல்லி : பெண்களை காங்கிரஸ் தலைவர்கள் போகப்பொருளாக பார்ப்பதாக பெண்ணியவாதிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இந்திய பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற ஆரம்பித்ததையொட்டி மத்திய அரசு மக்கள் நலனுக்கான மசோதாக்களை நிறைவேற்ற முன்னேற்பாடுகள் செய்துகொண்டிருந்த வேளையில் காங்கிரசின் எண்ணம் வேறாக இருந்தது. மேலும் எதிர்கட்சிகளையும் சக கூட்டணி கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு மசோதாக்களை தாக்கல் செய்ய விடாமல் கடந்த முறை போல இந்த முறையும் மன்றத்தை முடக்க திட்டமிட்டது.

ஆனால் இதையெல்லாம் முன்னரே உணர்ந்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. வரம்பு மீறும் எம்பிக்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தது. இந்நிலையில் காங்கிரசின் ரோமியோ பாய் என அழைக்கப்படும் சஷி தரூர் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் பெண் எம்பிக்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பகிர்ந்து ” யார் சொன்னது லோக்சபா பணிபுரிய அழகான இடம் இல்லை என்று. அழகான ஆறு எம்பிக்களுடன் நான் இன்று” என பதிவிட்டிருந்தார்.

`

இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் எம்பிக்கள் எம்.எல்.ஏக்கள் என பலர் பெண்கள் விவகாரத்தில் சிக்கியிருக்க சசி தரூரின் இந்த வர்ணனையான பேச்சு அருவருப்பை தருவதாக பெண்ணியவாதிகள் கொந்தளித்து வருகின்றனர்.

```
```

இது குறித்து பெண்ணியவாதியான விஜைதா சிங் குறிப்பிடுகையில் ” இதனால் தான் பணிபுரிய வருகிறார்கள். இந்த இடத்தை மேலும் அழகாக்க” என சையின் புகைப்படத்தை பகிர்ந்து கிண்டலடித்துள்ளார். பெண்ணியம் பேசும் பெண்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வோம் என கூறும் ப்ரியங்கா தலைமையிலான காங்கிரஸ் இதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறது என நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

……உங்கள் பீமா