8-11-21/ 14.50pm
பிஜேபி மாநில தலைவரின் நாக்கை அறுப்பேன் என மாநில முதல்வர் கூறியிருப்பது பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இடைத்தேர்தலில் தோல்வி பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. மேலும் வேளாண் பொருட்களை மத்திய அரசு வாங்க மறுப்பது பற்றிய விவாதமும் எழுந்தது.
ஆலோசனை கூட்டத்திற்குப்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் ” பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரியை மத்திய அரசு முழுமையாக நீக்க வேண்டும். மாநில அரசால் விலை குறைப்பு செய்ய முடியாது. விவசாயிகளை நெல் பயிரிட சொல்லி மாநில பிஜேபி தலைவர் ஏமாற்றி வருகிறார்.
மாநிலத்தில் சுமார் 5 லட்சம் டன் அளவிற்க்கான நெல் இருப்பில் உள்ளது. நெல்லை கொள்முதல் செய்யமாட்டோம் என மத்திய அரசு கையை விரித்துவிட்டது. இது தொடர்பாக சஞ்சய் ஏதாவது பேசினால் நாக்கை அறுத்து வீசிவிடுவோம்” என தான் ஒரு முதல்வர் என்பதை மறந்து கண்ணியமற்ற வார்த்தைகளை பிரயோகித்தார்.
மேலும் “சஞ்சய் என்னை ஜெயிலுக்கு அனுப்புவதாக கூறியுள்ளார். தைரியமிருந்தால் என் மீது கைவைத்து பார்க்கட்டும்” என செய்தியாளர்களிடம் சவால்விட்டு பேசினார். இதனால் தெலுங்கானா அரசியலில் பூகம்பம் எழுந்துள்ளது.
………உங்கள் பீமா