கேரளம் கர்நாடகம் , ஆந்திரம், தமிழகம் ஆகிய தென் மாநிலங்களே மஹாகவி பாரதியாரால் திராவிட நாடு என புகழ்ந்து பாடப்பட்டது. ஆனால் நீதிக்கட்சி வீழ்ச்சியடைந்ததும் சில முக்கிய குறிப்பிட்ட அதுவும் தமிழகம் சாராத தலைவர்கள் தமிழகத்தை திராவிட நாடு என சொல்லாட தொடங்கினர்.
இல்லாத ஆரிய பூச்சியை தங்கள் அரசியல் நோக்கத்துக்காக உயிர்கொடுத்து திராவிடர்களுக்கு எதிரி என மக்களை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்தனர். நாளடைவில் இந்துக்கள் தமிழர்கள் அல்லர் என்றனர். இனி திராவிடர் வேறு தமிழர் வேறு என முழக்கமிட அச்சாரம் போட்டுவிட்டனர்.
அதற்கான முதல்படியே சங்கத்தமிழ் இலக்கியங்கள் திராவிடதமிழ் இலக்கியமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு. இந்த அடிப்படையையே அசைத்துப்பார்க்கும் அறிவிப்பை எதிர்த்து பல எதிர்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழக பிஜேபி தலைவர் கே அண்ணாமலை தந்து கண்டனத்தை அழுத்தமாக பதிவு செய்தார்.
இந்நிலையில் திராவிடம் என்றால் என்ன என்று திடுக்கிடும் விளக்கம் ஒன்றை பீட்டர் அல்போன்ஸ் கொடுத்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில்,
“அறியாதவர்அறிக!
ஈழம்,கடாரம்,சீனம்,யவனம்போல ‘திருதமிழம்’ என்பதே திரிந்து ‘ திராவிடம்’ ஆனது என்பதில் எனக்குஎட்டுணையும் ஐயமில்லை!
-தேவநேய பாவாணர்
மூவேந்தர் நாடென்பதும்,தென்மறவர்நாடென்பதும்,பழந்தமிழ்நாடென்பதும் இந்நாள் வழங்கு’திராவிடநாடென்பதும் ஒன்றே!
-பாரதிதாசன்” என பதிவிட்டுள்ளார்.
(இதில் பீட்டர் குறிப்பிட்ட தேவநேய பாவாணர் அவர்கள் தனது பள்ளி படிப்பு மேற்படிப்பு ஆகியவற்றை கிறித்தவ மிஷனரியில் பயின்றார். மேலும் மிஷனரி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவநேய பாவாணர் சங்கரன்கோவில் அருகே ஒரு கிராமத்தில் பிறந்தார்.இவரது தந்தை ஞானமுத்து தோக்கோஸ் ஞானஸ்நானம் பெற்று குடும்பத்துடன் கிறித்தவ மதத்திற்கு மாறினார் என்பது வரலாறு.
இவரது முழுப்பெயர் ஞானமுத்து தேவநேயன் என்பதாகும். தமிழில் இவருக்கு இருந்த ஈடுபாட்டாலும் இலக்கிய சிந்தனையாலும் பாவாணர் எனும் பட்டம் கிடைக்கப்பெற்றது. ராஜபாளையம் அருகே முறம்பு எனும் ஊரில் இவரது நினைவிடம் அமைந்துள்ளது.)
பீட்டர் அல்போன்சின் இந்த பதிவுக்கு நடிகை கஸ்தூரி அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார். கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில், “திரிந்த பால் உடலுக்கு கேடு. திரிந்த சொல் உண்மைக்கு கேடு. தமிழ் இருக்க திராவிடம் எதற்கு? சங்கக் களஞ்சியம் அல்லது தமிழ் களஞ்சியம் என்பது மட்டுமே ஏற்றுக் கொள்ள கூடியது.” என கூறியுள்ளார்.
…உங்கள் பீமா