8-11-21/ 13.40pm
சென்னை; சென்னையில் பெய்து வரும் கனமழையால் நகரமே ஸ்தம்பித்திருக்கிறது. திமுகவினரால் தாயுமானவர் என புகழப்படும் முதல்வர் முக ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முதல்வர் முக ஸ்டாலின் நேற்று ஒரு நாள் மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் திமுகவினர் சிகப்பு கம்பள வரவேற்பளித்தனர். மேலும் ஒரு சில இடங்களில் நின்று அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். ஆனால் தி நகர் நங்கநல்லூர் பெரம்பூர் எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் ஆறாய் ஓடுகிறது. மக்கள் பெருத்த சிரமத்துக்குளாகியிருக்கின்றனர்.
பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சுரங்கப்பாதைகள் மற்றும் வேளச்சேரி மேடவாக்கம் தாம்பரம் போன்ற முக்கியமான பேருந்து நிலையங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதி மக்களின் நிலைமையை சீர்செய்ய முயற்சிகள் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் படகின்மூலம் மக்கள் மீட்கப்பட்டு பத்திரமாக அனுப்பப்படும் வீடியோ சென்னையில் மழையின் தாக்கத்தை எடுத்துரைக்கிறது. அடந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
…..உங்கள் பீமா