Monday, September 14, 2026
Home > அரசியல் > வரலாற்றை மாற்றி எழுதிய ஆளுநர்..! அடுத்தது தமிழகமா..?

வரலாற்றை மாற்றி எழுதிய ஆளுநர்..! அடுத்தது தமிழகமா..?

12-2-22/17.40pm

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில் மமதாவின் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் நடக்கும் எந்த ஒரு குற்றச்செயல்களும் ஆட்சியில் நடக்கும் எந்த ஒரு அவலமும் செய்திகளில் வெளிவருவதில்லை. அதனை மாநில அரசு இருட்டடிப்பு செய்கிறது என பிஜேபி மூத்த தலைவர் ஒருவர் சமீபத்தில் பரபரப்பான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனிடையே மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கு எதிரான கருத்துக்களை கூறிவருவதுமட்டுமல்லாமல் அவருக்கே எதிரான தீர்மானத்தை ராஜ்யசபா விதிகள் 170ன் படி நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆளுநரை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனவும் ராஜ்யசபாவில் அறிக்கை அளித்திருந்தார் மமதா பேனர்ஜி. மேலும் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் ஆளுநரின் ட்விட்டர் அக்கவுன்டையும் பிளாக் செய்திருந்தார். இது ஆளுநருக்கும் முதல்வருக்குமிடையேயான மோதலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.

இதன் பின்னணியில் ஆளுநர் ஜெகதீப் முக்கிய பதவி நியமனங்கள் பல அரசுத்துறையின் தகவல்கள் அறிக்கைகள் என மாநில அரசிடம் கேட்டதாக தெரிகிறது. அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாக கருதிய மமதா இந்த மாத இறுதியில் நடைபெற இருந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்துகொண்டிருந்தார்.

https://twitter.com/jdhankhar1/status/1492390605301121027?t=Eo3Ate2pp_jHzt2aSci6tQ&s=19

ஆனால் மமதாவின் தலையில் பேரிடியை இறக்கிவிட்டார் ஆளுநர் தங்கர். “நாளை முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரவும் வரை இந்த நிலை தொடரும்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆளுநர் தனது அதிகாரத்தின் வரம்பிற்குட்பட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது மம்தாவை பீதியடைய செய்திருக்கிறது.

இந்திய வரலாற்றில் சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்முன்பே அதை ஒத்திவைத்தது இதுவே முதல்முறை. இதனால் கடுப்பான மமதா ஆளுநரை நீக்கவேண்டும் என கூட்டணிக்கட்சிகளின் உதவியை நாடியிருக்கிறார்.

அதேபோல தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் மற்றும் அடுத்தடுத்த குண்டுவெடிப்பு போன்ற விரும்பத்தாகாத செயல்கள் நடப்பதால் ஆளுநர் ரவி மேற்கு வாங்க ஆளுநரை போல அதிரடி முடிவை எடுக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

….உங்கள் பீமா