8-11-21 / 16.45pm
தேனி : தமிழக பிஜேபி சார்பில் விவசாயிகளின் உரிமையை மீட்டெடுக்க அண்ணாமலை அவர்கள் தலைமையில் இன்று தேனியில் போராட்டம் நடைபெற்றது. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசிடம் திமுக மண்டியிட்டதாக தமிழக தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சித்தார்.
முல்லை பெரியாறு அணை பழுதடைந்திருப்பதாகவும் அதனால் புது அணை கட்ட வேண்டும் என குரல் கொடுத்து வருகிறது. கேரள அரசு அணை கட்டிவிட்டால் தமிழக விவசாயிகள் மீண்டும் தண்ணீருக்காக கையேந்தும் அவலமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதை உணராமல் திமுக அரசு மூன்று மரம் தடையாக இருக்கிறது 15 மரங்கள் இடைஞ்சலாக இருக்கிறது என அர்த்தமற்ற காரணங்களை சொல்வதாக தேனி விவசாயிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இன்று தேனியில் நடந்த கூட்டத்தின் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அவர்கள் ” சான் டிவி நண்பருக்கும் கோபாலபுர குடும்பத்திற்கும் நான் சொல்றது இந்த டைம் உங்க பருப்பு வேகாது. தப்பு பண்ணிட்டிங்க. மன்னிப்பு கேட்டே ஆகணும் உங்க பருப்பு இனி வேகாது. இத எப்படி வேணாலும் திருப்புங்க. சன் டிவியோ கலைஞர் டிவியோ கோபாலபுர குடும்பமோ எப்படி வேணாலும் திருப்ப முயற்சி பண்ணுங்க.
தப்பு பண்ணிருக்கீங்க பின்னாடி மண்டியிட்டிருக்கீங்க. எங்களோட உரிமையை விட்டு கொடுத்துருக்கீங்க. கேரள அரசு நம்மள அவமானப்படுத்திருக்கு. அதுக்கு முதல்ல முதல்வர் மன்னிப்பு கேட்டே ஆகணும். அப்புறமா சன் டிவி கலைஞர் டிவி நிருபரோ எடிட்டரோ சின்ஹா கேள்வியை கேக்க உரிமை இருக்கு” என பட்டாசாய் வெடித்தார்.
மேலும் இணையத்தில் மண்டியிட்ட திமுக என நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
…….உங்கள் பீமா