Saturday, July 27, 2024
Home > அரசியல் > இந்த கன்றாவியை பேசவா சட்டசபை சென்றீர்கள்..? முன்னாள் சபாநாயகர் ஆபாச பேச்சு..!

இந்த கன்றாவியை பேசவா சட்டசபை சென்றீர்கள்..? முன்னாள் சபாநாயகர் ஆபாச பேச்சு..!

17-12-21/9.51am

கர்நாடகா : கர்நாடகாவில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் பேச்சு சிரிப்பலையை உண்டாக்கியதுடன் ஒரு தேசிய கட்சியின் மாண்பையே குலைக்கும் விதத்தில் அமைந்துவிட்டது.

கடந்த வாரம் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசுகையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு ஒழிக்கப்பட்டு குஜராத் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார். அதை தொடர்ந்து பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதே காங்கிரசை சேர்ந்த கர்நாடக தலைவர் ஒருவர் இந்துவாக மாறிய வாஸிம் தலையை வெட்டிக்கொண்டு வருபவருக்கு பல லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என கூறினார்.

இதே காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக சர்ச்சை எழுந்து பின்னர் மூடி மறைக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போதைய வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த மாதம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு இழுத்து மூடப்பட்டது என தெரிகிறது.

`

இந்நிலையில் நேற்று கர்நாடக சட்டசபையில் பேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கே.ஆர் ரமேஷ் குமார் ” கற்பழிக்கும் போது உங்களால் எதிர்க்க முடியவில்லை என்றால் அதை அனுபவியுங்கள். கீழே படுத்து மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். பெண்ணுரிமை சமத்துவம் பேசும் எந்த ஒரு அரசியல் கட்சியும் இதை கண்டிக்க முன்வரவில்லை என்பது காலத்தின் கொடுமை.

```
```

மேலும் இதே வார்த்தையை பிஜேபியை சேர்ந்த யாராவது பேசியிருந்தால் இந்நேரம் ஊடகங்கள் மற்றும் காங்கிரஸ் அதன் கூட்டணிகள் பொங்கி எழுந்திருக்கும். என்ன செய்வது பேசியது காங்கிரஸ் ஆயிற்றே. அதனால் இந்த பெண்கள் பற்றிய அவதூறான பேச்சு காற்றில் கரைக்கப்பட்டுவிடும் என்பதே நிதர்சனமான உண்மை. ஊடக விவாதங்களில் இதையெல்லாம் பேச துணியாத வர்ணனையாளர்கள் மக்களை திசைதிருப்பும் முயற்சியிலேயே தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிடுகிறார்கள் என்பது கண்கூடு.

……உங்கள் பீமா