Monday, April 20, 2026
Home > அரசியல் > அடுத்த முதல்வர் யார்.? ஆளுநரின் பேச்சால் எழும் சர்ச்சை..!

அடுத்த முதல்வர் யார்.? ஆளுநரின் பேச்சால் எழும் சர்ச்சை..!

15-3-22/12.02pm

மணிப்பூர் : அறுபது தொகுதிகள் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான 32 இடங்களில் பிஜேபி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மேலும் பிஜேபி கூட்டணியான நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி ஏழு இடங்களிலும் ஜனதா தள் ஆறு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று ஆளுநர் இல. கணேசனை சந்தித்த முன்னாள் முதல்வர் பிரென்சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அப்போது ஆளுநர் அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும்வரை முதல்வர் பதவியை கேர்டேக் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். முதல்வர் பிரென்சிங்கும் அதற்கு ஒப்புக்கொண்டார். முதல்வர் பிரென் ஹெய்ங்காங் தொகுதியில் 18271 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மணிப்பூரில் முதல்வர் மாற்றம் நடைபெறலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரென் கூறுகையில் ” வருகிற 19 மார்ச் அன்று புதிய அரசு அமைய உள்ளது. அமையப்போகும் அரசில் நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி அங்கமாக இருக்காது. வெளியில் இருந்து ஆதரவு அளிப்பார்கள். மேலும் அவர்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளார்கள்” என குறிப்பிட்டார். மேலும் உத்தரகாண்ட் மாநில தேர்தலில் முன்னாள் முதல்வர் க்ஹாட்டிமா தொகுதியில் போட்டியிட்டு 6579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதனால் மீண்டும் முதல்வராகும் கனவு பறிபோயுள்ளது.

ஹோலி பண்டிகைக்கு பிறகு புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என மாநில பிஜேபி தலைவர் மதன் கவுசிக் தெரிவித்துள்ளார். டெல்லி தலைமையால் ஏற்படுத்தப்பட்டுள்ள தேர்வுக்குழுவிற்கு மீனாக்ஷி லேகி தலைமைதாங்குகிறார். மேலும் உத்தரகாண்ட் முதல்வராக அனில் பௌனி, அஜய் பட் அல்லது ரமேஷ் பொக்ரியால் தேர்ந்தெடுக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

…..உங்கள் பீமா