17-12-21/11.16AM
உப்பினங்கடி : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவண்ணமும் நடு ரோட்டில் தொழுகை நடத்த கூடாது என அறிவுரை கூறிய காவல் ஆய்வாளரை நூற்றுக்கணக்கான PFI இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் சராமரியாக தாக்கியது.
கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா மாவட்டம் உப்பினான்கடியில் ஒரு இஸ்லாமிய கும்பல் நடுரோட்டை மறித்து தொழுகை நடத்தினர். அதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் பலர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர். அப்போது அங்கே வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் இப்படி நாடு ரோட்டில் தொழுகை நடத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது சட்டப்படி குற்றம்.
அதனால் மக்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி உங்கள் தொழுகையை செய்யுங்கள் என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய PFI கும்பல் காவல்துறை அதிகாரியை சுற்றி வளைத்தது. அதன்பின்னர் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்க ஆரம்பித்தது. தடுக்கவந்த பத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த கும்பல் பயங்கரமாக தாக்கியது. இதில் படுகாயமுற்ற அதிகாரி மற்றும் காவலர்களை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனால் கர்நாடகாவில் பரபரப்பு தொற்றியுள்ளது. மேலும் இஸ்லாமிய PFI அமைப்பை தடைசெய்ய கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்து பேசிய விஹெச்பி டிவிசனல் செகரட்டரி சரண் பம்ப்வெல் ” காவல்துறையினரை தாக்கியதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. குற்ற செயலில் ஈடுபட்ட அத்தனை குற்றவாளிகளையும் கைது செய்யவேண்டும். இந்த இஸ்லாமிய அமைப்பு உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்” என கூறினார்.
இதுகுறித்து மங்களூர் சட்டமன்ற உறுப்பினர் காதர் கூறுகையில் “காவல்துறையினர் இஸ்லாமியர்களுக்கு லத்திசார்ஜ் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறை அத்துமீறி நடந்துகொண்டதை வன்மையாக கண்டிக்கிறேன்” என கூறியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சமீபத்தில் குற்றவாளிகளை கைது செய்ய சென்ற NIA அதிகாரிகளை இஸ்லாமிய கும்பல் வழிமறித்து ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகளை எங்கள் பூமியில் அனுமதிக்க மாட்டோம் என கூறியது குறிப்பிடத்தக்கது.
இவர்களை போல பலர் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வதால் இஸ்லாமிய சமுதாயத்தின் மீதே காழ்ப்புணர்ச்சி ஏற்படும் என்பதை இவர்கள் நினைத்து பார்க்க மாட்டார்களா என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் உப்பினான்கடி பகுதியில் 144 தடை உத்தரவு வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர்கிறது என காவல்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா