28-11-21/9.09am
சென்னை : சிலம்பரசன் நடித்து வெளிவந்திருக்கும் மாநாடு திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக பிஜேபியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று இரவு இது குறித்து அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்குப் புறம்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. சில இடங்களில் பிஜேபி நம்முடைய கண்டனங்களை கடுமையாக பதிவும் செய்திருக்கிறது.
திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குனர்களின் கற்பனையின் வெளிப்பாடு. அவர்கள் பார்த்த படித்த கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியின் சகோதர சகோதரிகள் சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாகவே மாறிவிடுகிறது.
எப்போது பேசவேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம். நமது இலக்கு நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாக செயல்படுங்கள்.
எனவே திரைத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்கவேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
…..உங்கள் பீமா