17-12-21/7.52Am
இந்தியா : நேற்று 1971 இந்தோ பாகிஸ்தான் போரின் நினைவு தினம் இந்திய ராணுவத்தால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த போரில் கலந்து கொண்டு உயிர்த்தியாகம் செய்த 3600க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களின் தியாகத்தை ராணுவம் மற்றும் மத்திய அரசு நினைவு கூர்ந்தது.


உலகின் மிகச்சிறிய போராக கருதப்படும் இந்த போரின் மூலம் இந்திய ராணுவம் பங்களாதேஷ் எனும் ஒரு நாட்டையே உருவாக்கியது நினைவுகூரத்தக்கது. பங்களாதேஷ் உருவாக இந்திய ராணுவம் செய்த தியாகங்கள் அளப்பரியது. ஆனால் அதே தேசத்தில் இந்தியாவுக்கு எதிரான பல பயங்கரவாத இயக்கங்கள் தற்போது தலைதூக்கியிருப்பது காலக்கொடுமை.
வரம் கொடுத்தவன் தலையில் கைவைத்தது போல அந்த இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளின் சமீபத்திய செயல்பாடுகள் இந்துக்களை கிறித்தவர்களை குலைநடுங்க செய்துள்ளது. துர்கா பூஜையின் பொது ஒரு இஸ்லாமியரே குரானை கொண்டு கோவிலில் வைத்து அதன்பின்னர் இந்துக்கள் தேடி தேடி வேட்டையாடப்பட்டது கொடுமையின் உச்சம்.

ஆனால் எந்த உலக நாடுகளும் இதற்க்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்பது இங்கே உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ராகுல் தனது பதிவில் இந்திராகாந்தியை மறந்து ராணுவ வீரர்களை மட்டுமே மத்திய அரசு கொண்டடாடுகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்திராவின் செய்கைகளை யாரும் புறந்தள்ளிவிட முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும் போரின் போது பிடிபட்ட 93000 பாகிஸ்தானிய வீரர்களை எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் விடுவித்தது ஏன் என கேள்விகள் எழாமல் இல்லை. அதற்க்கான விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

அதே நேரத்தில் நமது வீரர்கள் 56 பேரை பாகிஸ்தானிய அரசு போர்க்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு தகவலை வெளியிட மறுத்துவிட்டது. கடைசியில் காணாமல் போனோர்கள் பட்டியலில் அந்த வீரர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது நடக்கும் எல்லை பிரச்சினையை எப்போதோ இந்திரா காந்தி முடித்து வைத்திருக்கலாம். காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் முழுமையாக வெளியேறிய பின்னரே வீரர்களை திரும்ப அனுப்புவோம் என ஒரே ஒரு வார்த்தை அழுத்தமாக கூறியிருந்தால் என்றோ இந்த எல்லை பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும்.
இந்திரா இதை செய்யாதது ஏன் என முன்னாள் ராணுவ வீரர்கள் கேள்வியெழுப்புகின்றனர். அதே நேரத்தில் இந்திரா உயிர்தியாகத்தை பற்றி ராகுல் குறிப்பிட்டிருந்தார். அந்த கோர மரணம் ஒவ்வொரு இந்தியனின் அடிநெஞ்சிலும் வடுவாக பதிந்திருக்கிறது.

அதே சமயத்தில் பொற்கோவில் நடவடிக்கை காரணமாகவே சீக்கியர்கள் வெகுண்டெழுந்து இந்திராவை கொடூரமாக கொலை செய்தார்கள் என்பது வரலாறு. இந்திராவின் உயிர்த்தியாகம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆனால் அதற்காக வரலாற்றை ராகுல் மாற்றிப்பேசுவதை அனுமதிக்க இயலாது. இந்திராவின் மரணம் 1971 போரின் சம்பவங்களோடு தொடர்புடையது அல்ல என்பதை ராகுல் புரிந்து கொள்ளவேண்டும் என முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
……உங்கள் பீமா