10-11-21/ 6.20am
கேரளா : கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதுகுறித்த விசாரணையில் நேற்று அதிரடியாக உயர்நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது.
கோட்டயத்தை சேர்ந்த பீட்டர் மயாலிபரம்பில் என்பவர் கடந்த மாதம் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ” எந்த வெளிநாடுகளிலும் தடுப்பூசிகளில் பிரதமர் படமோ அதிபர் படமோ இடம்பெறவில்லை. இங்கு மட்டுமே அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தி தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். எனக்கு மொபைலில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. நீங்கள் இரு தவணை தடுப்பூசி எடுத்ததற்க்கு வாழ்த்துக்கள் எனவும் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய ஒரு இணைப்பையும் அனுப்பியிருந்தார்கள்.
நான் பதிவிறக்கம் செய்த பொது பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்தது. நான் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட பின்பும் மோடியின் புகைப்படம் இருப்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. பொது நலன் கருதி அந்த புகைப்படத்தை நீக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.நகரேஷ் ” இந்த மனுவின் கோரிக்கை ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. நாளை வேறொருவர் இந்திய ரூபாய் நோட்டுக்களில் மஹாத்மா காந்தி படம் இருக்க கூடாது என மனு கொடுப்பார். இதை ஏற்றுக்கொண்டால் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இழந்துவிடுவோம். இந்த வழக்கை நவம்பர் 23 க்கு ஒத்தி வைக்கிறேன்” என உத்தரவிட்டுள்ளார்.
…..உங்கள் பீமா