Monday, December 2, 2024
Home > செய்திகள் > “காஷ்மீரை இந்தியா ஆக்கிரமிக்கிறது” ஜிண்டால் சட்டக்கல்லூரியில் பிரிவினைவாத பாட திட்டம்..!

“காஷ்மீரை இந்தியா ஆக்கிரமிக்கிறது” ஜிண்டால் சட்டக்கல்லூரியில் பிரிவினைவாத பாட திட்டம்..!

10-11-21/ 11.05am

காஷ்மீரை இந்தியா ஆக்கிரமிக்கிறது எனும் பெயரில் ஒரு பாடத்திட்டத்தை வலிந்து புகுத்தியிருக்கிறது ஜிண்டால் சட்டக்கல்லூரி. இந்த ஜிண்டால் நிறுவனத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் பங்குகள் அதிகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிண்டால் தனது சட்டக்கல்லூரியில் 13 வாரங்களுக்குள் முடிக்குமாறு தனது மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதற்க்கான தலைப்புகளையும் கொடுத்துள்ளது. அந்த தலைப்புகளில் ஹிந்துத்துவம் இந்திய பிரிவினை வாதம் காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு எதிராக காஷ்மீரை ஏன் இந்தியா ஆக்கிரமிக்கிறது என்பன போன்ற இந்திய இறையாண்மைக்கு எதிரான தலைப்புக்களை கூறிஇருக்கிறது.

மேலும் இந்திய எதிர்ப்பு பிரிவினை வாத இலக்கியங்களும் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அந்த நூலில் ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிர வலது சாரி சக்தி எனவும் இந்துராஷ்டிரம் அமையும் போது சிறுபான்மையினரை சித்ரவதை செய்வார்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`

தேசிய பாடத்திட்ட கழகத்தில் இதுபோன்ற புத்தகங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே பள்ளிகள் கல்லூரிகளுக்கு வழங்கப்படுகிறதா என சந்தேகம் வலுத்துள்ளது. மாணவர்களை தவறான வழியில் வழிநடத்தி செல்லும் இது போன்ற கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை அது சார்ந்த பல்கலைக்கழகங்கள் கண்காணிக்கிறதா என்பதும் கேள்விக்குறியதாகியிருக்கிறது.

```
```

மேலும் இந்தியாவின் பெரிய தொழிலதிபரான நவீன் ஜிண்டாலுக்கு சொந்தமான கல்லூரி இது என்பது அதிர்ச்சியளிக்க கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

……..உங்கள் பீமா