Friday, April 18, 2025
Home > அரசியல் > அப்போ எதிர்ப்பு..! இப்போ ஆக்கிரமிப்பு..! இது திமுக ஸ்டைல்..!

அப்போ எதிர்ப்பு..! இப்போ ஆக்கிரமிப்பு..! இது திமுக ஸ்டைல்..!

10-11-21/ 5.40am

கோயம்புத்தூர்: திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடும் ஆளுங்கட்சியாக பிறகு ஒரு நிலைப்பாடும் எடுப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது தமிழகத்தில் ஒரு சிறு பிரச்சினை என்றாலும் அதை பூதாகாரமாக்கி விவாதப்பொருளாக மாற்றிவிடும். சாலையில் பேனர் விழுந்து இறந்த இளம் பெண் முதல் பெற்றோர் கவனக்குறைவால் போர்வெல் குழியில் விழுந்து இறந்து போன சிறுவன் வரை அனைத்தையும் அரசியலாக்கியது திமுக.

ஆனால் இதே திமுக தலைவர் ஸ்டாலின் படம்பொறித்த பேனர் விழுந்து ஒரு இளம்பெண் பரிதாபமாக உயிர்விட்டார். அதை பற்றி ஊடகங்களும் வாய் திறக்கவில்லை. திமுகவும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றது. இதே போல விவசாயிகளுக்கான ஆட்சி திமுகவுடையது என கூறிக்கொள்ளும் முக ஸ்டாலின் விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது தமிழக விவசாயிகளை கவலைகொள்ள செய்திருக்கிறது.

`

சேலம் முதல் சென்னை வரை மத்திய அரசு 8 வழி சாலை கொண்டு வர முயற்சி செய்தபோது தனது கூட்டணி சகாக்களுடன் சேர்ந்து முக ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். விவசாயிகள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும். தமிழக விவசாயிகள் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்றெல்லாம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது அதிரடியாக 2000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

```
```

கோயம்புத்தூர் அருகே உள்ள அன்னூர் பகுதியில் 2000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பூங்கா அமைக்கப்பபோவதாக திமுக அரசு அறிவித்துள்ளது. இது தற்போது விவசாயிகள் மத்தியில் பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

…..உங்கள் பீமா