28-2-22/15.50pm
திருவனந்தபுரம் : கேரள உயர்நீதிமன்றம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இங்குதான் கம்யூனிஸ்டுகள் ஈடுபட்ட தங்க கடத்தல் வழக்கு சோலார் பேனல் வழக்கு ஆகியவை மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வழக்கு நடைபெற்று வருகிறது. இங்கு சிசிடிவி பொறுத்த கொடுக்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கேரளா பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் பி.ஏ.முகம்மது ரியாஸ். இவர் முதல்வர் பினராயிவிஜயனின் மருமகனாவார். கடந்த 2021 அக்டொபரில் பொதுப்பணித்துறை திருச்சூரில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு சிசிடிவிக்களை வாங்கி உயர்நீதிமன்றத்தில் பொருத்தும் ஏலத்தை அறிவித்தது. இந்த டெண்டரை விட தலைமை பொறியாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

ஆனால் ஒருகோடிக்கு மேலான டெண்டரை தலைமைபொறியாளர் தான் விடவேண்டும் என தெரிந்தும் தனது அதிகாரவரம்பை கடந்து செயற்பொறியாளர் டெண்டர் விட்டதாக தெரிகிறது. இதன்பின்னணியில் ரியாஸின் அழுத்தம் இருந்ததாக தகவல்கள் பரவிவருகின்றன. இதனிடையே ஒருகோடி மதிப்பிலான டெண்டருக்கு 5.37 விடப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களான கெல்ட்ரான் போன்றவற்றை அழைக்காமல் தகுதிநீக்கம் செய்துவிட்டு ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக தெரிகிறது.
அந்த குறிப்பிட்ட நிறுவனம் பொதுப்பணித்துறையின் மின்னணு ஒப்பந்தங்கள் எல்லாவற்றையும் டெண்டர் மூலம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் கசிந்ததையடுத்து உயர்நீதிமன்றம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. மேலும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் தொடர்ந்து டெண்டரை கைப்பற்றிவரும் அந்த நிறுவனத்துடன் பொதுப்பணித்துறை அமைச்சருக்கு மறைமுக தொடர்பு இருப்பதாகவும் பல சிபிஎம் தலைவர்களுக்கு அந்த நிறுவனத்துடன் பங்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் பல முக்கியமான வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரித்து வரும்வேளையில் நீதியரசர்களை வேவுபார்க்க யாரவது இந்த நிறுவனம் மூலம் முயன்றார்களா என எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
…..உங்கள் பீமா
