Monday, December 2, 2024
Home > அரசியல் > மே.வ தேர்தல் வன்முறை வழக்கில் வாதிட்ட வழக்கறிஞர் திடீர் ராஜினாமா..! மம்தா நெருக்கடியா..?

மே.வ தேர்தல் வன்முறை வழக்கில் வாதிட்ட வழக்கறிஞர் திடீர் ராஜினாமா..! மம்தா நெருக்கடியா..?

மேற்கு வங்க தேர்தலையொட்டி திரிணாமூல் காங்கிரஸாரால் நடத்தப்பட்ட வன்முறையில் இருபதிற்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். ஒண்ணரை லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை மாநிலத்திற்கு தப்பித்து ஓடினர். சுமார் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.100கோடிக்கும் மேலான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பயங்கர வன்முறையை விசாரிக்க வந்த தேசிய மகளிர் ஆணையம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் குழுவினர் அடித்து விரட்டப்பட்டனர். இந்த வழக்கு தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் நீதிபதிகளாக இருந்த இந்திரா பானெர்ஜி மற்றும் அனுராக் ஆகியோர் வழக்கின் ஆரம்ப நிலையிலேயே விலகி கொண்டனர். இவர்கள் இருவரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

`

மேற்கு வங்க அரசின் சார்பில் எந்த ஒரு ஆலோசகரும் நியமிக்கப்படாததால் தள்ளிபோய்க்கொண்டிருந்த இந்த வழக்கு நீதிமன்றத்தின் கடுமையான கண்டிப்பின் பிறகு மாநில அரசால் ஆலோசகராக கிஷோர் தத்தா நியமிக்கப்பட்டார். வழக்கின் போக்கு மம்தாவுக்கு பாதகமான சூழலை உருவாக்கிய நிலையில் இன்று கிஷோர் தத்தா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு அனுப்பி வைத்தார்.

ஆளுநர் ஜகதீப் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. கிஷோர் தத்தா திரிணமூல் முகுல் ராய்க்கு ஆதரவாகவும் வன்முறை வழக்கில் அரசின் சார்பாகவும் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

```
```

மம்தாவின் அழுத்தம் காரணமாகவே ராஜினாமா நாடகம் அரங்கேறியிருக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.

..உங்கள் பீமா