Sunday, September 27, 2026
Home > அரசியல் > மூத்த நிர்வாகிகளை கழற்றிவிட்ட ராகுல் அண்ட் கோ..!

மூத்த நிர்வாகிகளை கழற்றிவிட்ட ராகுல் அண்ட் கோ..!

5-2-22/16.50pm

சண்டிகர் : பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் கட்சிகள் நட்சத்திர பேச்சாளர்களை களம் இறக்கிவருகிறது. காங்கிரசும் தனது பங்குக்கு நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. அந்த அப்பட்டியலில் மூத்த தலைவர்கள் பலரை காங்கிரஸ் கழற்றி விட்டுள்ளது.

பஞ்சாப் உத்திரபிரதேசம் மணிப்பூர் உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்துமாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வருகிற 10ஆம் தேதி தொடங்க இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மார்ச் மாதம் அறிவிக்கப்பட இருக்கிறது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் தேர்தல் பிப்ரவரி 20 அன்று தொடங்குகிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மீ பிஜேபி முன்னாள் முதல்வர் அமரீந்தரின் கட்சி காங்கிரஸ் என பலத்த போட்டி நிலவுகிறது.

இதில் பிஜேபியுடன் முன்னாள் முதல்வர் அமரீந்தர் கூட்டணிவைத்து போட்டியிடுகிறார். இதனிடையே பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேச நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் மூத்த நிர்வாகிகளான மனிஷ் திவாரி குலாம் நபி ஆசாத் ஆகியோரை காங்கிரஸ் கழற்றிவிட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் குலாம் நபி ஆசாத் தனது ட்விட்டர் கணக்கில் இருந்து காங்கிரஸ் எனும் வார்த்தையை குறிப்பிடத்தக்கது. மேலும் மனிஷ் திவாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை வெகுவாக புகழ்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இதனால் ஏற்பட்ட சலசலப்பே பட்டியலில் பெயர் இடம்பெறாததற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

…உங்கள் பீமா