Friday, March 29, 2024
Home > செய்திகள் > நடக்காத கோவில் திருப்பணிக்கு 24 கோடி செலவு..! வெளிச்சத்துக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை ஊழல்..!

நடக்காத கோவில் திருப்பணிக்கு 24 கோடி செலவு..! வெளிச்சத்துக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை ஊழல்..!

சென்னை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதேஸ்வரர் கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது புகழ் பெற்ற சிவன் கோவில் ஆகும். இங்கு பக்தர்கள் வெளியூரிலிருந்தும் தரிசனம் செய்ய வருகிறார்கள்.

இங்கு இருக்கும் கோவிலுக்கு சொந்தமான திருக்குளம் புனரமைக்கப்படாமலேயே இருக்கிறது. 2013 முன்பு வரை இங்கு தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வந்தது. 2013க்கு பிறகு நீர் இல்லாத காரணத்தால் தெப்பத்திருவிழாவும் நடைபெறவில்லை.

இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் சிலர் 2019ல் மனு கொடுத்திருக்கின்றனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் அங்கிருந்த செயல் அலுவலர் முன்னெடுக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக நடவடிக்கை எடுக்கிறோம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு கொடுத்தவர்களுக்கு பதில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

`

கடந்த மாதம் 7-6-21 அன்று எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.மேலும் 10-6-21 அன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களும் நேரடி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

9-6-21 அன்று முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்ப ட்ட நிலையில் 23-7-21 அன்று 24 கோடியே 23லட்சம் செலவில் அருள்மிகு கங்காதீஸ்வரர் கோவில் குளம் மற்றும் அருள்மிகு விருப்பாசீஸ்வரர் கோவில் திருக்குளம் ஆகியவற்றை புனரமைத்துவிட்டதாக முதலமைச்சர் தனிப்பிரிவின் மூலம் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.

```
```

திருக்கோவில்களின் புனரமைப்பு நடைபெறாமலேயே பணி முடிவடைந்துவிட்டதாக கூறியது பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவில்களின் வருமானம் திருப்பணிக்கு அல்லாமல் எங்கே செல்கிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

….உங்கள் பீமா