12-2-22/16.50pm
உத்ரகாண்ட்: உத்திரகாண்ட் மணிப்பூர் உத்திரபிரேதசம் கோவா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலையொட்டி பிரதமர் மோடி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாராளுமன்றத்தில் காங்கிரசின் வரலாறை நாறடித்த பிரதமர் மோடி பரப்புரை கூட்டங்களிலும் காங்கிரஸ் அன்ட் கோவை விட்டுவைக்கவில்லை.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபுரில் தேர்தல்பரப்புரை கடைசிநாளான இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றினார். அப்போது ” 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மிக மோசமான கோவிட் 19 சுகாதார நெருக்கடியை நமது தேசம் சந்தித்தது. இருந்தபோதிலும் நமது பிஜேபி அரசு திறம்பட அதைகையாண்டது. அதேநேரத்தில் மாநில வளர்ச்சியிலும் கவனம் செலுத்தியது.

ஏழை மக்களுக்கு சேவை செய்தது.பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேசன்பொருட்கள் கொரானா காலகட்டத்தில் வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்திருந்தால் ரேஷன் பொருட்களோ நலத்திட்டமோ மக்களிடம் சென்றடைந்திருக்காது. கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு ஏழையும் உணவின்றி தூங்கவில்லை. உத்திரகாண்ட் மாநிலத்தில் பெரிய சாலை ரயில்,விமானம், ரோப் கார் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டது பிஜேபி அரசு.
கோவிட் தடுப்பூசி பற்றிய வதந்தியை மக்களிடையே பரப்பி மக்களை பீதியடைய வைக்க நினைத்தது காங்கிரஸ். அரசியலுக்காக மக்களின் உயிரோடு விளையாடியது காங்கிரஸ். மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்தை அவமானப்படுத்தியது காங்கிரஸ். வரும் பிப்ரவரி 14 இந்த அவமானத்திற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுக்கவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
…..உங்கள் பீமா
