புதுதில்லி : இந்திய பாதுகாப்புப்படைகளின் தலைமை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கடந்த இரண்டரைவருடங்களுக்கு மேலாக பரிசீலனையில் இருந்த ஆயுதப்படைகளை மேம்படுத்தும் அக்னிபாத் திட்டம் கடந்த செவ்வாயன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் ராணுவத்தில் சேர விரும்பும் துடிப்புமிக்க இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்க்கும் காங்கிரஸ் தற்போது இந்த அக்னிபாத் திட்டத்தையும் எதிர்த்து வருவதுடன் மாணவர்களை போராட தூண்டிவருவதாக பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே டெல்லியில் அமைந்துள்ள ஜந்தர்மந்திரில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ப்ரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை ) நடத்தினர்.
மறைந்த நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் சொன்னது போல மைண்ட் வாய்ஸுன்னு நெனச்சு சத்தமா பேசித்தானோ என்ற நகைசுவை போல ப்ரியங்கா காந்தியின் டூல்கிட் வெளிவந்துள்ளது. அவர் இன்று பேசியதாவது ” இந்த அக்னிபாத் திட்டம் ராணுவத்தையும் தேசத்தை காக்கும் இளைஞர்களையும் கொன்றுவிடும்.
இந்த அரசாங்கத்தின் மூலம் என்னவென்று பாருங்கள். இந்த அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்கள் இலக்கு இந்த அரசை கவிழ்ப்பதாகவே இருக்கவேண்டும்” என கூறி இளைஞர்களை போராட தூண்டியுள்ளார். அதேபோல போலியாக மாணவர்கள் என கூறிக்கொண்டு வன்முறையை தூண்டிய இந்திய தேசிய காங்கிரசின் மாணவர் பிரிவு தலைவர் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவரான பராக் பன்வர் மற்றும் சமாஜ்வாடி தலைவரான சந்தீப் உட்பட ஐந்துபேரை உத்திரபிரதேச காவல்துறை நேற்று கைதுசெய்துள்ளது.
➡️ थाना रामपुर मनिहारन, सहारनपुर पुलिस द्वारा अग्निपथ स्कीम के विरोध में प्रदर्शन करने वाले 05 Fake Army Aspirants को किया गिरफ्तार !!
.@akashtomarips#UPPolice pic.twitter.com/psH0FvHt87— Saharanpur Police (@saharanpurpol) June 18, 2022
ஏற்கனவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த நாளே தேசத்தில் போராட்டம் வெடிக்கும் என ராகுல் காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தில் ஈடுபடும் பல இளைஞர்கள் எதிர்க்கட்சிகளின் இளைஞர் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர் பிரிவை சேர்ந்தவர்கள் தான் என பிஜேபியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ப்ரியங்காவின் டூல்கிட் கருத்துக்கள் மேலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
