18-3-22/13.45pm
திருச்சி : தகவல் கொடுத்த மாற்று திறனாளி ஒருவரை போலீசார் கடுமையாக தாக்கியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

விராலிமலை பகுதியில் வசித்து வருபவர் சங்கர். இவர் ஒரு மாற்று திறனாளி. இவரது பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மதுவிற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் கொந்தளித்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரளித்த அவரையே அங்குள்ள காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறுகையில் ” மாற்றுத்திறனாளியான சங்கர் என்பவர் விராலிமலை காவல்நிலையத்தில் மதுவிற்பனை குறித்து புகாரளித்துள்ளார். அவரை காவல்நிலையத்தில் பிடித்து வைத்த மூன்று கான்ஸ்டபிள்கள் சராமரியாக தாக்கியதாக சங்கர் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு பாதிக்கப்பட்டவர் ஐஜிக்கு வாட்ஸப்பில் புகாரளித்த விவரத்தையும் தான் தாக்கப்பட்ட விவரத்தையும் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய மூன்று கான்ஸ்டபிள்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டனர்.

புகார் கொடுக்க வந்தவரையே போட்டு பிளந்த காவல்துறையினரைக் கண்டு திருச்சி மக்கள் அச்சமடைவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுத்த உயரதிகாரிகளைப் பாராட்டி வருவதாகவும் விராலிமலைவாசி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
…..உங்கள் பீமா