18-3-22/14.52pm
சென்னை : தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முதன்முறையாக முழுபட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் கூறுகையில் “சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரச்சாரங்களால் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் ஒன்று ஏற்படுத்தப்படும். இந்த மதிப்பீடுகளில் காவல்துறைக்கு 10.285.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப்பற்றாக்குறை 52.781.17 கோடி ரூபாயாகும்.இது கடந்த ஆண்டைவிட குறைவு. வருவாய்ப்பற்றாக்குறை 2022-23ம் ஆண்டில் 26.313.15 கோடியாகவும் 2023-24ம் ஆண்டில் 13.582 கோடியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்த கடன்வரம்பின் அடிப்படையில் 2022-23ம் ஆண்டில் 90.116 கோடிகள் கடன்பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கடனில் சரக்குகள் மற்றும் சேவைவரி இழப்பீட்டிற்கு ஈடாக மத்திய அரசால் வழங்கப்படும் 6500.00 கோடி இதில் அடங்காது” என குறிப்பிட்டுள்ளார். மேலும் மகளிருக்கு மாதாமாதம் வழங்குவதாக இருந்த 1000 ரூபாயை உயர்கல்வியை தொடர விரும்பும் மாணவிகளுக்கு மாத ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது திமுக அரசு.
வடிவேலு நகைச்சுவை காட்சியில் பணம் எப்போ தருவ. வரும்போது தருவேன் என்கிற வசனம் வரும். அதற்கேற்றாற்போல தமிழக வரவு செலவு சமமாகி நிதி மிச்சப்படும்போது மகளிருக்கு மாதாமாதம் 1000 வழங்கப்படும் என இந்த பட்ஜெட் உரையில் திமுக தெரிவித்துள்ளது.
…..உங்கள் பீமா